வெள்ளாட்டு கொம்பில் ரைடிங் போகும் குரங்கு குட்டி - வைரல் வீடியோ
வெள்ளாடு ஒன்றின் ராட்ச கொம்புகள் மீது குரங்குக் குட்டி ஜாலியாக ரைடிங் போகும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குரங்கு சேட்டைக்கு அளவே இருக்காது என பொதுவாக கூறுவதை அனைவரும் கேட்டிருப்போம். கிராமபுறங்களில் சேட்டை செய்யும் குழந்தைகளையும் சிறுவர்களையும் குரங்கு சேட்டை செய்யாதே என்று தான் அடைமொழியோடு கண்டிப்பார்கள். அந்தளவுக்கு குரங்கின் சேட்டைகள் வித்தியாசமாகவும் யூகிக்க முடியாததாகவும் இருக்கும். குரங்குகள் அதிகம் இருக்கும் பகுதியில் வாழ்பவர்களுக்கு தெரியும் குரங்குகளின் சேட்டைகள் என்னவென்று. மலைக்கோயில்களுக்கு சென்றிருந்தால் அங்கு அதனுடைய சேட்டைகளை அனுபவித்துக்கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | இது ஒரு அழகிய மழைக்காலம்: இணையவாசிகளை ஏங்க வைத்த வைரல் வீடியோ
அதனுடைய ஒப்புதல் இல்லாமல் உங்களால் ஒரு பையைக்கூட எடுத்துச் செல்ல முடியாது. உங்கள் பை மீது அது கண் வைத்துவிட்டால், ஸ்கேன் செய்த பிறகே உங்களிடம் அதனை ஒப்படைக்கும். நீங்கள் கொடுக்க மறுத்தால் தாவி வந்து பையை பிடுங்கிவிடும். இதுஒரு புறம் இருக்க, சில சமயங்களில் ஜாலியாக, ரசிக்க வைக்கும் சேட்டைகளையும் செய்யும். அப்படியான குறும்புத்தனமான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
ராட்சத கொம்பு கொண்ட வெள்ளாடு ஒன்று அமைதியாக இருக்க, வேகமாக ஓடி வரும் குரங்கு ஒன்று அதன் கொம்புகளைப் பிடித்து ஜாலியாக ரைடிங் போவதுபோல் ஓடியாடி விளையாடுகிறது. ஆனால், அந்த வெள்ளாடு குரங்கின் சேட்டைக்கு எந்த எதிர்ப்பும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. இதனை நீண்ட நாட்களாக பார்த்த ஒருவர், குரங்கு வெள்ளாட்டிடம் செய்யும் சேட்டையை அழகாக வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை சாம்ராட் கவுடா என்ற ஐஎப்ஸ் அதிகாரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வாக்கிங் செல்லாமல் ஸ்கேட்டிங் சென்று டபாய்க்கும் தாத்தா: வீடியோ வைரல்
வீடியோவை பார்த்த அனைவரும் குரங்கின் சேட்டையையும், அமைதியாக ராட்ச கொம்புடன் இருக்கும் வெள்ளாட்டையும் வெகுவாக ரசித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR