வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இணையத்தில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். குரங்குகளின் பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 


சமீபத்திலும் ஒரு குரங்கு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. நாம் பல குரங்கு வீடியோக்களை பார்த்துள்ளோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு வீடியோவை கண்டிப்பாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இதில் நாம் காணும் காட்சி மிக அரிய காட்சியாக உள்ளது.  இந்த வீடியோ ஒரு கல்லூரி வகுப்பறையில் எடுக்கப்பட்டுள்ளது. 


ப்ரொபோஸ் செய்த குரங்கு:


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்கு ஒன்று ஒரு கல்லூரியில் தனது வகுப்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் ப்ரோபோஸ் செய்வதை பார்க்க முடிகின்றது. குரங்கின் அன்பின் வெளிப்பாட்டை பார்த்து வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக சிரிக்க ஆரம்பித்தனர். இந்த அரிய வகை வீடியோ சமூக வலைதளங்களில் அதிக சலசலப்பை உருவாக்கி வருகிறது. மேலும் மக்கள் இதை அதிகம் விரும்பி பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்


வகுப்பறையில் புகுந்த குரங்கு


வீடியோவில் ஒரு கல்லூரியில் உள்ள ஒரு வகுப்பில் மாணவர்களும் மாணவிகளும் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது அங்கு திடீரென்று ஒரு குரங்கு வருகின்றது. குரங்கை பார்த்ததும் முதலில் மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். பலர் தங்கள் இடங்களிலிருந்து எழுந்து பயந்து வேறு இடத்துக்கு செல்கிறார்கள். ஆனால், குரங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் நேராக ஒரு பெண்ணிடம் வருகிறது. அந்த பெண்ணும் அச்சத்துடன் தான் இருக்கிறார். ஆனால், குரங்கு மிக அருகில் இருப்பதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.


குரங்கு என்ன செய்யுமோ என அச்சத்தோடு அந்த பெண்ணும் பிற மாணவர்களும் பார்த்துக்கொண்டிருக்க, குரங்கோ மிக வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்கிறது. அது திடீரென பெண்ணின் கையை பிடித்து  தன் கையில் வைத்துக்கொண்டு ப்ரொபோஸ் செய்வது போல செய்கிறது. இதை பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள். அந்த பெண்ணுக்கும் அச்சம், வெட்கம், சிரிப்பு என அனைத்து உணர்ச்சிகளும் ஏற்படுகின்றன.


வீடியோ வைரல் ஆனது



சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ gautam.music என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'இந்த குரங்கை பார்த்து எனக்கு என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டன' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'குரங்கு அழகாக தன் காதலை வெளிப்படுத்தியுள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ