நண்பன் ஒருவன் வந்த பிறகு..நண்பனை உயிரை கொடுத்து காப்பாற்றிய குரங்கு!
குரங்கு ஒன்று அதன் நண்பனை காப்பாற்ற போராடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரங்கிலிருந்து தோன்றியது தான் மனித இனம் என்கிற கூற்று காலம்காலமாக இருந்து வருவது நமக்கு தெரியும். மனிதர்களின் செயல்களை ஒத்தே தான் குரங்குகளின் செயல்களும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது பெரும்பாலான மனிதர்களுக்குள் இல்லாத இரக்க குணங்கள், பல விலங்கினங்களிடையே இருந்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது ஒரு குரங்கு அதன் நண்பனை காப்பாற்ற பதற்றத்துடன் போராடி, மீண்டும் உயிர்பெற செய்யும் காட்சி அனைவரிடமும் பாராட்டை பெற்று வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ
ட்விட்டரில், ஃபிகன் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் ஒரு குரங்கு உணர்ச்சியற்று படுத்து கிடைக்க அதன் அருகில் இரண்டு குரங்குகள் இருக்கிறது. படுத்திருக்கும் அந்த குரங்கை, மற்றொரு குரங்கு தொட்டதும் அது சுருண்டு கீழே விழுகிறது, பின்னர் குழிக்குள் விழுந்த குரங்கை மீட்க அந்த குரங்கு போராடுகிறது. பின்னர் அதனை மேலே தூக்கி கம்பியின் மீது வைத்து முதலுதவி செய்வது போன்று அதன் முதுகு பக்கத்தில் அமுக்கி விடுகிறது. அப்படி செய்தும் அந்த குரங்கிற்கு உணர்ச்சி எதுவும் வரவில்லை, மீண்டும் விடாமல் அந்த குரங்கு தொடர்ந்து தனது நண்பனை காப்பாற்ற போராடுகிறது. பின்னர் அந்த குரங்கை இழுத்து தண்ணீருக்குள் இரண்டு, மூன்று தடவி முக்கி எடுக்கிறது, ஒருவழியாக அந்த குரங்கு உயிர்பிழைத்து நல்லபடியாக அமர்ந்துகொண்டு இருக்கிறது.
ரயில் நிலையத்தில் குழுமியிருந்த மக்கள் அனைவரும் இந்த காட்சியை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, குரங்கு செய்த இந்த இந்த செயல் பல தரப்பினரிடம் இருந்தும் மிகுந்த பரட்டை பெற்று இருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை 1.4மில்லியனுக்கும் அதிகமான இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு ஐம்பத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR