Monkey Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோக்களை இனையவாசிகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். சமூக வலைதளங்களில் தினமும் குரங்குகளின் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இங்கு குரங்கு செய்யும் செயல் நம்மை மிகவும் ஆச்சரியப் பட வைக்கும்.


மேலும் படிக்க | புல்லெட்டில் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த மணமக்களின் வைரல் வீடியோ


இந்நிலையில் தற்போது வைரலான வீடியோவில் நபர் ஒருவர் படிக்கட்டுகளில் ஏறுவதை காணலாம். படிக்கட்டுக்குப் பக்கத்தில் இருந்த சுவரில் ஒரு குரங்கு உட்கார்ந்து அந்த நபரைக் கண்காணித்துக்கொண்டிருந்தது. அந்த நபர் குரங்கின் அருகில் வந்தவுடன், குரங்கு ஒரு கையை அந்த நபரின் தோளில் வைத்து மற்றொரு கையால் அவரது கண்ணாடியைப் பறிக்கிறது. பின்னர் அந்த நபிரிடம் வம்பிழுக்க ஆரம்பிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ மைக்ரோ X தளமான @kdgothwal1 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.  


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இதை பார்த்தா ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆசையே போயிரும்... அலறவைக்கும் வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ