வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகளுக்கு என்று இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சிங்கம், புலி, குரங்கு, பாம்பு ஆகியவை சமூக ஊடகங்களில் மிக பிரபலமான மிருகங்களாகும். சில நேரங்களில் குரங்குகள் மக்களின் கவனத்தை தங்கள் குறும்புகளால் ஈர்க்கின்றன. குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்காகக் கருதப்படுகின்றன. குரங்குகளின் குறும்பை காட்டும் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன.


சமீபத்தில் இரண்டு குரங்குகள் தொடர்பான ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதில் ஒரு குரங்கிடம் ஆப்பிள் பழம் இருப்பதையும், அதை வைத்து அது செய்யும் அலும்பும், அதற்கு மற்றொரு குரங்கு காட்டும் ரியாக்‌ஷணும் மிக கியூட்டாக உள்ளது. 


நண்பனை சீண்டிய குரங்கு


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு குரங்கு கையில் ஒரு ஆப்பிளுடன் தனது தோஸ்த் குரங்கின் அருகில் வந்து அமர்வதை காண முடிகின்றது. முதலில் ஆப்பிளை காட்டி அந்த குரங்கு மற்றொரு குரங்கை சீண்டுகிறது. பின்னர் அதை சாப்பிடத் தொடங்குகிறது. மற்ற குரங்கு ஆப்பிளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் முதல் குரங்கு அதற்கு ஆப்பிளை கொடுக்கவில்லை. இரண்டாவது குரங்கின் பார்வை ஆப்பிளை விட்டு மற்ற பக்கம் சென்றவுடன் முதல் குரங்கு மீண்டும் அதன் முன்னால் ஆப்பிளை காட்டி அதை சாப்பிடத் தூண்டுகிறது. 


மேலும் படிக்க | இப்படி ரோட்ல நின்னு சண்டை போட்டா போலீஸ் புடிச்சிட்டு போயிடும்! ஜாக்கிரதை கங்காருஸ் 


இப்படியே இரண்டாவது குரங்குக்கு காட்டிக்காட்டி, முதல் குரங்கு மொத்த ஆப்பிளையும் தின்று விடுகிறது. 


குரங்கின் வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்: 



மற்றொரு புறம் இந்த வீடியோ வேறு ஒரு விதமான கதையையும் கூறுகிறது. முதல் குரங்கு, இரண்டாம் குரங்குக்கு ஆப்பிளை அளிக்க மிகவும் முயற்சி செய்வது போலவும், அதற்காக ஆப்பிளை காட்டி காட்டி அதை சாப்பிட வைக்க முயற்சிப்பது போலவும் தெரிகிறது.


இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்தால் நமக்கு பல நினைவுகளும் வருகின்றன. சிறு வயதில் நண்பர்களுடன் நாம் பகிர்ந்துகொண்ட இனிமையான தருணங்களை இந்த வீடியோ நமக்கு மீண்டும் நினைபூட்டுகின்றது. 


மேலும் படிக்க | சிங்கத்தின் முகத்தை கவ்விய மலைப்பாம்பு, சில நொடிகளில் மரணம்: திகிலூட்டும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ