சிங்கத்தின் முகத்தை கவ்விய மலைப்பாம்பு, சில நொடிகளில் மரணம்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Viral Video: உங்களுக்கு பலவீனமான இதயமாக இருந்தால் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். திகிலூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 19, 2023, 02:48 PM IST
  • மிக அபாயகரமான மிருகங்களில் மலைப்பாம்பு ஒன்றாகும்.
  • மலைப்பாம்புக்கு மிகப்பெரிய உயிரினத்தையும் விழுங்கும் ஆற்றல் உண்டு.
  • இது மின்னல் வேகத்தில் இரையைப் பிடித்து மெதுவாக விழுங்குகிறது.
சிங்கத்தின் முகத்தை கவ்விய மலைப்பாம்பு, சில நொடிகளில் மரணம்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மிக அபாயகரமான மிருகங்களில் மலைப்பாம்பு ஒன்றாகும். மலைப்பாம்புக்கு மிகப்பெரிய உயிரினத்தையும் விழுங்கும் ஆற்றல் உண்டு. இது மின்னல் வேகத்தில் இரையைப் பிடித்து மெதுவாக விழுங்குகிறது. மலைப்பாம்பு தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

தற்போதும் மலைப்பாம்பு மற்றும் மலை சிங்கத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காணப்படும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் உள்ளது. மலை சிங்கம் ஒன்று வேட்டையாடுவதற்கு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இரைக்காக மிக நொந்துபோன சிங்கம், ஒரு கால்வாயில் ஏதாவது சிறு மிருகம் தனக்கு உணவாக கிடைக்குமா என தேட அதற்குள் நுழைகிறது. ஆனால் ஒரு பெரிய மலைப்பாம்பு தனக்காக அங்கே காத்திருப்பது அதற்குத் தெரியாது. இந்த வீடியோவில் காணப்படும் காட்சி அனைவரையும் திகிலடையச் செய்கிறது. 

மேலும் படிக்க | Flowering Buds: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்ததில்லையா? இதோ அதிசய அற்புத வீடியோ 

சிங்கத்தை தாக்கிய மலைப்பாம்பு 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலை சிங்கம் இரைக்காக அலைந்து திரிந்த ஒரு கால்வாயில் நுழைவதை காண முடிகின்றது. அதில் ஏதாவது மிருகம் இருக்கின்றதா என எட்டிப்பார்க்கின்றது. ஆனால், அப்போது உள்ளே பதுங்கி இருக்கும் மலைப்பாம்பு ஒன்று அதன் வாயை பற்றிக்கொள்கின்றது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிங்கத்தின் பாதியை உடலை மலைப்பாம்பு விழுங்கி விடுகின்றது. சிறிது போராடும் மலை சிங்கம் பின்னர் அசையாமல் அடங்கிப்போகின்றது. 

மலைப்பாம்பு சிங்கத்தை விழுங்கும் வீடியோவை இங்கே காணலாம்: 

சிங்கத்தை மலைப்பாம்பு மெதுவாக கொன்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சியை பொதுவாக நாம் எங்கும் காண முடியாது. இந்த கொடூரமான காட்சி சமூக ஊடகத்தளமான ட்விட்டரில் @511turkee என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | குழந்தைக்கும் குரங்குக்கும் பாசப்போராட்டம்: குடும்பங்கள் கொண்டாடும் வைரல் வீடியோ!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News