Flowering Buds: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்ததில்லையா? இதோ அதிசய அற்புத வீடியோ

Adorable Nature Beauty: மலர் சூல் கொள்வதை யாரும் பார்த்தது இல்லை என்று சொல்வோம் ஆனால் மலர்கள் மலரும் தருணத்தை பார்க்கும் சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணாதீங்க...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2023, 10:45 AM IST
  • மலர் சூல் கொள்வதை பார்த்ததுண்டா?
  • மலர்கள் மலரும் தருணத்தை கண்டதுண்டா?
  • இல்லைன்னா இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க...
Flowering Buds: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்ததில்லையா? இதோ அதிசய அற்புத வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: நெட்டிசன்களால் தற்போது பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களின் பட்டியலில், அழகான ஒரு இயற்கை நிகழ்வு உள்ள வீடியோ சேர்ந்துவிட்டது. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட சமூக ஊடகங்கள், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து கொடுக்கின்றன. தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்த ஊடகங்கள், இயற்கையின் அரிய தருணங்களையும் நமக்கு காண வாய்ப்புகளை கொடுப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

இணையத்தில் மோசமான விஷயங்களை பற்றி மட்டுமா தெரிந்துகொள்கிறோம்? தேவையான செய்திகள், அத்தியாவசியமான செய்திகள், காமெடி, சோகம், பயம், அதிசயம், அற்புதம் என பலவித உணர்வுகளைஉம் இணைய உலகம் வாரி வழங்குகிறது. இணையத்தின் மூலம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை ஓரிரு வார்த்தைகளில் அடக்கிவிடவும் முடியாது.

இணையத்தில் பகிரபப்டும் புகைப்படங்களும், வீடியோக்களும் உலக நடப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றன. அதே போல, சில நெகிழ்ச்சியான தருணங்களையும் சமூக ஊடகங்கள் வழங்குகின்றன. பூக்கள் பூப்பதை நீங்கள் பார்த்ததுண்டா? 

மேலும் படிக்க | வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு செம வைரலாகும் ‘கைப்புள்ள புலிக்குட்டி’ ! ஏய் நீ புலிடா!

பூக்கள் பூக்கும் தருணம் பார்த்ததாரும் இல்லையே…உலரும் காலை பொழுதை… முழு மதியும் பிரிந்து போவதில்லையே… என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதா? உடனே, கைகள் இந்த வார்த்தைகளை, டைப் செய்து, பாடலை பார்க்க மனம் விழையும். ஆனால், மலர்கள் மலர்வதைப் பார்ப்பது என்பது மிகவும் அரிய நிகழ்வு.

இதுபோன்ற அரிய நிகழ்வுகளையும் காணும் வசதியை இணைய வசதி நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்களில்,வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இயற்கை அழகுகளையும், அதிசயமான இயற்கை நிகழ்வுகளையும் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் பூக்கள் மலரும் வித்தியாசமான வீடியோ ஒன்றைப் பார்க்கலாம்.

மனதை நெகிழ்வூட்டும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் இந்த மலர்கள் மலரும் வைரல் வீடியோ, ஒரு சில நொடிகளில் பூக்கள் பூப்பதை காட்டும் ரம்மியமான இயற்கை நிகழ்வை அழகாய் காட்டுகிறது.

மனதை மயக்கும் இந்த வீடியோவில், கூம்பி இருக்கும் மலர் மொட்டு ஒன்று, பந்தைப் போல காட்சியளித்த அடுத்த நொடியிலேயே, ஒவ்வொன்றாய் விரியும் அற்புத காட்சி, திகைக்க வைக்கிறது. 

இதுபோன்ற வீடியோக்கள் அவ்வப்போது தான் பார்க்கக் கிடைக்கும். இதை மிஸ் செய்தால், உங்களுக்குத் தான் நெகிழும் சந்தர்ப்பம் மிஸ் ஆகிவிட்டது என்று தோன்றும்.

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News