வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் உலகில் உள்ள மிகவும் அறிவார்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். இவற்றின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் தினமும் காண்கிறோம். குரங்குகளின் பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. சில நேரம் இவை வழிப்போக்கர்களை சீண்டுவதும், சில நேரம் குழந்தைகளுக்கு ஈடாக ஸ்மார்ட்போன்களில் விளையாடுவதும் காண்பவர்களை வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கின்றன. 


தற்போது குரங்கு பற்றிய ஒரு மிக வேடிக்கையான வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதில் குரங்கு ஒன்று மனிதர்களை போல வீட்டு வேலையை செய்வதை காண முடிகின்றது. 


அசல் வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இது சமீபத்தில் மீண்டும் நெட்டிசன்களை பரவசப்படுத்த வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், குரங்கு துணி துவைப்பதை காண முடிகின்றது. குரங்கு ஒன்று தண்ணீர் தொட்டியில் அமர்ந்து, துணிக்கு சோப்பு போட்டு துணி துவைப்பதை வீடியோவில் காண்கிறோம். ஒரு சலவைக்காரர் துணி துவைப்பது போல, அந்த குரங்கு துணியை அடித்து துவைப்பது காண்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. 


மேலும் படிக்க | சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 


குரங்கு துணியை நன்றாக பிரஷ் செய்து துவைத்து, பின் அதை தண்ணீரில் அலசுகிறது. துணி துவைப்பதில் ஒரு குரங்கு இத்தனை ஆர்வமாக ஈடுபட்டுள்ளதை காண மிகவும் வேடிக்கையாக உள்ளது. 


பிரஷ், சோப் கொண்டு குரங்கு அழகாக துணி துவைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 


 



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘ankit_ang_11' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 1.2 மில்லியன் வியூஸ்களும் 99 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இந்த குரங்கு எங்கள் வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘ஆஹா.. எவ்வளவு அழகாக வேலை செய்கிறது’ என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ