தாய் பாசம் மனிதர்களை கடந்து விலகுகளிடம் இருக்கும். நாய், குரங்கு, யானை, சிங்கம் புலி என அவற்றின் குட்டிகளை பாதுகாக்க தாய் விலங்குகள் இக்கட்டான சமயங்களில் போராடுவதையும், நாள்தோறும் அழகாக பராமரிப்பதையும் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. செல்லப்பிராணிகளை வளர்க்கும் அனைவரும் விலங்குகளின் இந்த பாசத்தை பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. அப்படியான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. வனப்பகுதியில் இருக்கும் குட்டை ஒன்றில் விழுந்த குட்டி யானையை பத்திரமாக மீட்ட தாய் - தந்தை யானைகள் போராடி மீட்கின்றன.
மேலும் படிக்க | மீண்டும் மீண்டும் சீண்டிய பெண்: கடுப்பாகி குரங்கு செய்த செயல், வைரல் வீடியோ
வெயில் காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சியில் தண்ணீர் இல்லாமல் யானை உள்ளிட்ட விலங்குகள் பெரும் சவாலை எதிர்கொள்ளும். இதற்காக வனத்துறை சார்பில் ஆங்காங்கே தற்காலிகமாக குட்டைகள் தோண்டப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படும். அந்த குட்டைகள் மழைக்காலங்களில் நிரம்பி வழியும். அப்படி நிரம்பிய குட்டை ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற குட்டி யானை ஒன்று விழுந்துவிடுகிறது. அதில் இருந்து வெளியே வர தெரியாமல் நீந்திக் கொண்டே இருக்கிறது.
When it comes to protection of babies elephants are very very serious. Calf entered water pool, see the anxiety of adult elephants.... pic.twitter.com/dSGFfl7HbB
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) October 25, 2022
இதனைப் பார்த்த தாய் - தந்தை யானைகள் இரண்டும் குட்டி யானை விழுந்த குட்டை அருகே பதறி ஓடி வருகின்றன. மேலிருந்தவாறு அந்த யானைக் குட்டியை மீட்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், குட்டைக்குள்ளேயே இறங்கி தள்ளி வெளியே கூட்டி வருகின்றன. அப்போது குட்டியானை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு ஆரம்பத்தில் பதைபதைப்பதாக இருந்தாலும், இறுதியில் புன்னகை ததும்ப வைக்கிறது.
மேலும் படிக்க | Video : செம! மேகத்திற்கு மேலே... கிரிக்கெட் பார்க்க சூப்பரான லோகேஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ