குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ

மலைப்பாம்பு குரங்கை எப்படி விழுங்குகிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். ஆனால் அடுத்த நொடியே குரங்கு கூட்டம் அந்த ஒரு குரங்கை காப்பாற்ற முயற்சிக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 4, 2022, 12:44 PM IST
  • 10 நீள பாம்பின் வைரல் வீடியோ.
  • குரங்கை விழுங்கிய மாலைப்பாம்பு.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

குரங்கை விழுங்கிய மாலைப்பாம்பின் வீடியோ வைரல்: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் குரங்கு, நாகப்பாம்பின் பல வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ பல குரங்குகள் மற்றும் மலைப்பாம்பு தொடர்பானது. மலைப்பாம்பு குரங்கை தன் பிடியில் பிடித்ததை இதில் காணலாம். அப்போது அதை பார்த்தத மற்ற குரங்குகள் அங்கு கூட்டமாக கூடத் தொடங்கினர்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

மலைப்பாம்பின் பிடியில் குரங்கு
காட்டு விலங்குகள் தொடர்பான இந்தக் காணொளியில் மலைப்பாம்பினால் குரங்கு ஒன்று பிடிபட்டு அதை மோசமாக முறுக்கத் தொடங்கும் விதத்தை பார்க்கலாம். மலைப்பாம்பு தன் இரையை எப்படியும் முழுவதுமாக விழுங்கும் திறன் கொண்டது. இந்த வீடியோவிலும் அந்த பாம்பு அதையே செய்ய முயற்சித்தது. ஆனால் பிரேமில் அடுத்து காணப்படுவது வியக்க வைக்கும்.

பைத்தானின் வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோவில், குரங்குகள் கூட்டமாக தங்கள் துணையை காப்பாற்ற அந்த இடத்திற்கு வருவதை நீங்கள் மேலும் பார்க்கலாம். இந்த நேரத்தில் மலைப்பாம்பு மற்ற குரங்குகளையும் தாக்குகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ @Wildmaofficial என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News