புகுந்த வீட்டில் கொடுமை, வரதட்சணை கொடுமை போன்ற சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இது ஒரு வினோதமான வழக்கு. இதில் மாமியார் தனது மருமகளிடம் இறந்த மகனின் விந்தணுவைக் கேட்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருமகளிடம் இறந்த மகனின் விந்துணு கோரும் மாமியார்
சமீபத்தில், புற்றுநோயால் அவரது கணவர் இறந்த பிறகு, விதவையான அந்த பெண் ஒரு விசித்திரமான பிரச்சனையில் சிக்கினார். அவளுடைய கணவனின் பெற்றோர் , தங்களது இறந்த மகனின் வாரிசை வளர்க்க வேண்டும் ன்று விரும்புகிறார்கள். அதனால் தங்களது மகனின் விந்தணுவை திருப்பித் தருமாறு விதவை பெண்ணிடம் கேட்கிறார்கள்.


மரணத்திற்கு முன்  சேமிக்கப்பட்ட விந்தணு


மாமியாரின் இந்த கோரிக்கையால் அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. எப்படி நடக்கும் என்று யோசிக்கிறார்கள். உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த பெண் தனது கணவருக்கு புற்றுநோய் கண்டறிப்பட்டு, கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு  அவரது வாரிசை பெற்றெடுப்பதற்காக தனது விந்தணுவை சேமித்து வைத்துள்ளார்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்


மனக்குழப்பத்தில் மருமகள்


ஆனால் ஜூலை 19 அன்று, அவரது கணவர் இறந்தார், இதன் காரணமாக மிகவும் சோகத்திற்கு உள்ளானார் அந்த பெண். அதை அடுத்து வாரிசு வேண்டும் என  குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு மருமகளை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். பெண் தற்போது குழப்ப நிலையில் உள்ளார் . 


அதனால், விந்தணுவை திருப்பி தருமாறு மாமியார் - மாமனார் கோருகின்றனர். வாடகை தாய் மூலம் வாரிசை உருவாக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், மருமகள், இந்த வயதில் பேரக்குழந்தைகளை எப்படி வலர்கக் முடியும் என மறுத்துவிட்டார். “அவர்கள் இருவரும் 60 வயதை கடந்தவர்கள். என் கணவருக்கு ஆதரவளிக்கக்கூடிய உடன்பிறப்புகள் இல்லை. அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என குழப்பமாக உள்ளது என அந்த பெண் கூறுகிறார். அதனால் அந்த பெண் தனது மறைந்த கணவரின் விந்தணுக்களை தனது மாமியாரிடம் கொடுக்க மறுத்துவிட்டார்.


 அந்த பெண் தனது வழக்கை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவிற்கு  1600 க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர், அதில் சில கருத்துகள் மருமகளுக்கு ஆதரவாகவும், சிலர் வயதான பெற்றோருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


ALSO READ | கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு தீ மிதிக்கும் கணவன்மார்கள்; காரணம் என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR