கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு தீ மிதிக்கும் கணவன்மார்கள்; காரணம் என்ன..!!

அண்டை நாடான சீனாவில் ஒரு விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் தனது கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு தீ மிதிக்கும் பழக்கம் உள்ளது என்பதை கேடால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா..!!

பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் ஒரு விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் தனது கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு தீ மிதிக்கும் பழக்கம் உள்ளது என்பதை கேடால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா..!!

1 /5

சீன கலாச்சாரத்தில் ஒரு வழக்கம் உள்ளது. எரியும் கரித் துண்டுகள் சுமார் 5-6 மீட்டர் வரை நீளம் வரை பரப்பி போடப்படுகிறது. அதன் மீது  கணவன்மார்கள் தங்கள் கர்ப்பிணி மனைவிகளை  சுமந்து கொண்டு எரியும் கரி மீது நடக்கிறார்கள்.

2 /5

சீன ஆண்கள் அதைச் செய்வது அவசியம் என்று கருதுகின்றனர். கணவர் தனது கர்ப்பிணி மனைவியைத் தூக்கி  கொண்டு எரியும் கரியின் மீது நடந்து வெற்றிகரமாகத் தாண்டினால், அவரது கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது பிரசவ வலி குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

3 /5

கர்ப்ப காலத்தில், பெண்ணின் மன நிலையில் மாற்றம் மற்றும் பிற உடல நல பிரச்சனைகளுக்கு கர்ப்பிணி பெண்களின் உடலில் இருந்து  9 மாதங்களுக்கு வெளியாகும்  ஹார்மோன்கள் காரணம் என்று சீன ஆண்கள் நம்புகிறார்கள். 

4 /5

ஆண்கள் தங்கள் தந்தை என்ற உன்னதமான பதவியை வழங்கி மகிழ்ச்சியைக் கொடுக்க தங்கள் மனைவி இந்த அளவிற்கு கஷ்டப்படும்போது, ​​அவளைப் போல வலியைத் தாங்குவது அவர்களின் சமூகப் பொறுப்பாக மாறும் என்று ஆண்கள் கூறுகிறார்கள். எரியும் கரி மீது நடப்பதன் மூலம், அவர்கள் தங்கள் மனைவி மீது அசைக்க முடியாத அன்பு கொண்டிருப்பதாக ஆண்கள் நம்புகிறார்கள். அதே சமயம்,  சந்தோஷத்திலும் துக்கத்திலும் துணையாக இருப்பார் என்று மனைவிக்கு உறுதியளிக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

5 /5

இந்த நடைமுறை, 21 ஆம் நூற்றாண்டில் சீனாவில் தொடர்கிறது, எனினும், இந்த பாரம்பரியம் மிகவும் ஆபத்தானது என்று அவர்கள் கூறுகிறார்கள். எரியும் கரி மீது நடக்கும்போது கணவரின் கால் தவறினால், அவருடன் சேர்ந்து கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையும் இறக்கலாம்.