ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து வீரர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினர். சென்னை அணி தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு எம்எஸ் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார். அங்கு அவர் தனது யமஹா ஆர்டி 350 பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மே 18, சனிக்கிழமை பெங்களூரில் நடந்த சிஎஸ்கேயின் கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவி இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நடுரோட்டில் வைத்து தனது மகனின் காதலியை வெளுத்த தாய்! வைரல் வீடியோ!


எம்எஸ் தோனி யமஹா ஆர்டி 350 பைக்கில் செல்வதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழையும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் இருந்து தோனியும் அவரது குடும்பத்தினரும் ராஞ்சிக்கு திரும்பி உள்ளனர். தோனி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே ரசிகர்கள் அவரை சூழ்ந்து கோஷமிட்டனர். பலரும் தோனியுடன் செல்பி எடுக்க முயன்றனர். மேலும் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத் ராஞ்சிக்கு வந்ததை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். 



தோனி பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் தோனி அவரது பைக்கில் சாதாரணமாக தெருக்களில் செல்லும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகும். ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டில் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட பைக்குகள் மற்றும் கார்கள் உள்ளது. ஒரு வீடியோவில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தோனியின் வீட்டில் இரண்டு மாடி பைக் கேரேஜ் ஒன்றை வெளியிட்டார்.


பிளேஆஃப் போட்டியில் இருந்து சென்னை அணி வெளியேறி உள்ளதால் இதுவே தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். பெங்களூருவில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 219 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. மேலும் பிளேஆப்க்கு தகுதி பெற 201 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும் 10 ரன்கள் குறைவாக அடித்து இதனை தவறவிட்டது. கடைசி ஓவரில் சிஎஸ்கேக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது எம்எஸ் தோனி அதிரடியாக விளையாடினார். முதல் பந்திலேயே 110மீ சிக்ஸருக்கு அடித்தார், ஆனால் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.


மேலும் படிக்க | RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ