WTC Final: முதல் உலக டெஸ்ட் சேம்பியன்ஷ்ப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை தோற்கடித்தது. மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் ஆறாவது நாளான நேற்று நியூசிலாந்து வெற்றிபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை (ஜூன் 23) சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (WTC Final) நியூசிலாந்து அணி இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் பின்னர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மற்றொரு ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் டி 20, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐ.சி.சி பட்டங்களை வென்ற முதல் கேப்டனாக எம்.எஸ்.தோனி ஆன அதே நாளில்  இந்திய அணி இந்த தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த போட்டியில் புகழ்பெற்ற இந்திய பேட்டிங் வரிசை அடுத்தடுத்து இரண்டு இன்னிங்சிலும் தோல்வியுற்றது. இந்திய அணியின் பந்து வீச்சும், நியூசிலாந்து அணியை ஒப்பிடுகையில், மிகவும் சாதாரணமாகவே இருந்தது. தோல்விக்குப் பிறகு, விராட் கோலியின் தலைமை மீது மீண்டும் பல கேள்விகள் எழுந்துள்ளன. 


எம்.எஸ்.தோனியா விராட் கோலியா (Virat Kohli)? யார் சிறந்த கேப்டன்?? என்ற விவாதத்தை உடனடியாக ரசிகர்கள் சமூக ஊடகனகளில் துவக்கினர். ஐ.சி.சி போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற  எம்.எஸ். தோனி, அவற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றார். 


ALSO READ: WTC2021: நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது


ட்விட்டரின் சில ரியாக்ஷன்கள் இதோ: 






ஐ.சி.சி போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியா கடந்த காலங்களில் 10 முறை இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது. இதில் நான்கு முறை மட்டுமே வெற்றி பெற்றது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா கலந்துகொள்ளவுள்ள அடுத்த ஐ.சி.சி போட்டியாகும். 


எம்.எஸ் தோனியின் சாதனைகளை பாராட்டும் வகையில், சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி, அவருக்காக ஒரு பதிவை வெளியிட்டது. 



சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று விட்ட தோனி (MS Dhoni), தற்போது IPL -லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில் பிர்மிங்கமில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராஃபியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவை வழிநடத்திச்சென்று வெற்றிபெற வைத்தார். ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த வெற்றியின் மூலம், தோனி, டி 20, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐ.சி.சி பட்டங்களையும் வென்ற முதல் கேப்டனானார்.


ALSO READ: WTC Final: ஒரு இறுதிப் போட்டியை இப்படியா நடத்துவார்கள்?-சுனில் கவாஸ்கர் காட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR