WTC Final: ஒரு இறுதிப் போட்டியை இப்படியா நடத்துவார்கள்?-சுனில் கவாஸ்கர் காட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்  இரண்டு நாட்களை மழை அடித்துச்சென்று விட்டது. இந்த போட்டி இப்போது டிராவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2021, 02:41 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மழைதான் விளையாடுகிறது.
  • போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கவாஸ்கர் காட்டம்.
  • கூட்டு வெற்றியாளர் முறையை ஏற்க முடியாது என முன்னாள் வீரர்கள் கருத்து.
WTC Final: ஒரு இறுதிப் போட்டியை இப்படியா நடத்துவார்கள்?-சுனில் கவாஸ்கர் காட்டம் title=

WTC Final Update: இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC Final) இறுதிப் போட்டியின் மோசமான எற்பாடுகள் குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளர். 

இந்த போட்டியின் இரண்டு நாட்களை மழை அடித்துச்சென்று விட்டது. இந்த போட்டி இப்போது டிராவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால் இந்தியாவும் நியூசிலாந்தும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

ICC மீது சுனில் கவாஸ்கர் காட்டம்

ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது சுனில் கவாஸ்கர்ம் (Sunil Gavaskar), "கூட்டு வெற்றியாளர்களுக்கான யோசனை சரியானது அல்ல. போட்டி டிரா ஆகும் பட்சத்தில் ஐ.சி.சி கிரிக்கெட் குழு இது குறித்து கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இல், அதிக பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து அணி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது. அதே போல், இந்த முறையும், அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் இதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும்." என்று கூறினார்.

கூட்டு உலக சாம்பியன் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர் மேலும் கூறுகையில், "கால்பந்தில், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் அல்லது வேறு வழி இருக்கிறது. டென்னிஸ் ஐந்து செட் மற்றும் ஒரு டை பிரேக்கர் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி (WTC Final) டிரா ஆகும் நிலையிலும், வெற்றியாளரை தீர்மானிக்க ஒரு சூத்திரம் இருக்க வேண்டும்." என்றார்.

ALSO READ: WTC Final: 4வது நாள் ஆட்டமும் ரத்து! 5வது நாளில் வானிலை எப்படி இருக்கும்

போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால், "போட்டியை மீண்டும் நடத்த வேண்டும். போட்டி முழுமையாக நடத்தப்பட்டு ஒரு முடிவு கிடைக்க வேண்டும். இது இறுதிப்போட்டி, எனவே அதை மீண்டும் புதிதாக தொடங்கி நடத்த வேண்டும். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. ஆனால் மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி டிரா ஆனால், கண்டிப்பாக அதை மீண்டும் நடத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து சாதகமான நிலையில் உள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தின் மூன்றாம் நாளில் நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் டெவன் கான்வே (54) அருமையான அரைசதம் அடித்தார். நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கான லீடைப் பெற்றாலும், இந்தியாவை எளிதாக ஆல் அவுட் செய்து விட முடியும். இந்தியாவைப் (Team India) பொறுத்தவரை, நியூசிலாந்து விக்கெட்டுகளை அவர்கள் மளமளவென எடுக்க வேண்டி இருக்கும். இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ALSO READ: WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News