WTC Final: பந்து போடுவதை விட்டு ரூமுக்கு பறந்து சென்ற பும்ரா, ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றனர். எனினும், இந்த போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது. இதற்கிடையில் இன்று ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2021, 10:39 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது.
  • பும்ரா செய்த ஒரு செயலால் அவர் ஆன்லைனில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.
  • அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
WTC Final: பந்து போடுவதை விட்டு ரூமுக்கு பறந்து சென்ற பும்ரா, ட்ரோல் செய்யும் ரசிகர்கள் title=

சவுத்தாம்டன்: முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றனர். எனினும், இந்த போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது. ஆட்டம் பலமுறை தடைபட்டு வருவதால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா (Jasprit Bumrah) செய்த ஒரு தவறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் (WTC Final) ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. 

இந்திய பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. எனினும் அவர் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளார். விரைவில் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட பும்ராவால், சவுத்தாம்டன் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போதிலும் சரியான லெந்தில் பந்துவீசு முடியவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவிலான ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் இணையத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர். 

எனினும், இன்றைய ஆட்டத்தில் அவர் தன்னுடைய பழைய நேர்த்தியான ஃபார்மில் வருவதை காண முடிந்தது. முதலில் ஷார்ட் பந்துகளை வீசி அவர் தடுமாறினாலும், பின்னர் சரியான லெங்தை கண்டறிந்து நல்ல பந்துகளை வீசத் தொடங்கினார். ஒழுங்கான முறையில் பந்துவீச தொடங்கிய பின்னரும்  பும்ரா மீண்டும் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். ஆனால் இந்த முறை அவர் விமர்சிக்கப்பட்டதற்கு அவரது பந்துவீச்சு காரணமில்லை, அவர் ஜெர்சியை தவறாக அணிந்து வந்ததே காரணம்!! 

ALSO READ: WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்

இன்று ஆட்டம் துவங்கியபோது, ஜஸ்பிரித் பும்ரா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக பிரத்யேகமாக அளிக்கப்பட்டுள்ள ஜெர்ஸியை அணிந்து கொள்ளாமல், இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து விளையாட வந்துவிட்டார். அந்த ஜெர்சியை அணிந்தபடியே அவர் ஒரு ஓவரையும் வீசி விட்டார்.

அதன் பிறகு இதைப் பற்றி பலர் கண்டறிந்து கூறவே பும்ரா ஆட்டத்தின் நடுவில், ஓய்வறைக்கு சென்று தனது ஜெர்ஸியை மாற்றிக்கொண்டு வந்தார். பும்ராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி (Viral Post) வருகின்றன. 

அப்படி இரண்டு ஜெர்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? வழக்கமாக ஒவ்வொரு அணியின் டெஸ்ட் போட்டிக்கான ஜெர்ஸியிலும், ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் நடுவில் இருக்கும், அந்தந்த நாடுகளின் பெயர்கள் ஓரத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். எனினும், ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், விளையாட்டு வீரர்களின் ஜெர்ஸியின் நடுவில் நாடுகளின் பெயர் இடம்பெற்றிருக்கும். ஸ்பான்சர்களின் பெயர்கள் ஜெர்ஸியின் வேறு பகுதியில் தான் இடம்பெற்றிருக்கும். 

எப்படியோ ஜெர்சியை மாற்றி போட்டுக்கொண்டு வந்த பும்ரா, சில நேரம் இன்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரால் ஆனார்!!

ALSO READ:M.S. Dhoni: அசத்தும் புது லுக்குடன் சிம்லாவில் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News