Live-ஆக இருப்பது தெரியாமல் பேசிய Kohli, Shastri: லீக் ஆகி வைரல் ஆகிறது சுவாரசியமான ஆடியோ

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நேரலையில் (Live) இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 11:38 AM IST
  • விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் உரையாடல் கசிந்தது.
  • லைவ்-வாக இருப்பது தெரியாமல் நடந்தது உரையாடல்.
  • இந்த ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
Live-ஆக இருப்பது தெரியாமல் பேசிய Kohli, Shastri: லீக் ஆகி வைரல் ஆகிறது சுவாரசியமான ஆடியோ  title=

புதுடெல்லி: நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தயாராக உள்ளது. WTC இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறும். இந்திய அணி இங்கிலாந்தை அடைந்த பிறகு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். இதில் மூன்று நாட்கள் ஹோட்டலிலேயே தங்க வேண்டியிருக்கும். அனைத்து வீர்ரகளும் உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இதற்கு முன்னதாக இந்திய ஆணியின் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இருப்பினும், இதற்கெல்லாம் இடையே, ஒரு சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது. விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் ஆடியோ ஒன்று கசிந்துள்ளது. இது வேகமாக வைரஸ் ஆகி வருகிறது. 

கோலி-சாஸ்திரி உரையாடலின் ஆடியோ கசிந்தது

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நேரலையில் (Live) இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதல் குறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

கசிந்த இந்த ஆடியோவில், விராட் கோஹ்லி, "நாம் அவர்களுக்கு விக்கெட்டை சுற்றி (ரவுண்ட் தி விக்கெட்) பந்து வீசுவோம். இடதுகை பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். லாலா, சிராஜ் என அனைவரையும் துவக்கத்திலிருந்தே களத்தில் இறக்கி விடுவோம்" என்று கூறுகிறார்.

ALSO READ: Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது! கேன் வில்லியம்சன்

விராட் கோலியின் இந்த கருத்துக்கு ஒப்புக்கொள்ளும் விதத்தில் ரவி சாஸ்திரி 'ஹ்ம்ம்ம்ம்ம்' என்று கூறுகிறார்.

இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி (Viral) வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த உரையாடலை மிகவும் விரும்புகிறார்கள். ஜீ நியூ இந்த ஆடியோவை உறுதிப்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

இங்கிலாந்தில் பயிற்சி அதிகம் இருக்காது, ஆனால் கவலைப்படத் தேவை இல்லை: கோலி

இங்கிலாந்துக்குச் (England) செல்வதற்கு முன்பு, கோலி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "இதற்கு முன்னரும் நாங்கள் பல முறை, போட்டிகள் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளோம். அப்படி உள்ள போதிலும் அந்த தொடர்களில் நன்றாக ஆடியுள்ளோம். இவை அனைத்தும் நம் எண்ணம் பற்றிய விஷயங்கள்தான். இங்கிலாந்தில் நாங்கள் முதல் முறையாக விளையாடவில்லை. அங்குள்ள சூழல் எங்களுக்கு நன்றாகத் தெரியும். நான்கே பயிற்சி அமர்வுகள் இருந்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்று கூறினார்.

போட்டிகள் ஜூன் 18 முதல் தொடங்கும்

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் நாட்டிங்ஹாமில் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸில் ஆகஸ்ட் 12 முதல் 16 வரையிலும், மூன்றாவது லீட்ஸ் டெஸ்ட் ஆகஸ்ட் 25 முதல் 29 வரையிலும், நான்காவது டெஸ்ட் போட்டி தி ஓவலில் செப்டம்பர் 2 முதல் 6 வரையிலும், ஐந்தாவது டெஸ்ட் மான்செஸ்டரில் செப்டம்பர் 10 முதல் 14 வரையிலும் நடைபெறும்.

ALSO READ: Vegan Diet: வேகன் உணவுமுறைக்காக ட்ரோலாகும் விராட் கோலி, காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News