வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் சில சமயம் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். கண்கள் பார்ப்பது உண்மையா இல்லையா என்பது பற்றி மனதிலும் உள்ளத்திலும் விவாதம் நடந்து கொண்டிருக்கும். சமீபத்தில், இதுபோன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.


இதைப் பார்த்தால் உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்த அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து வீடியோவில் நடக்கும் விஷயம் உண்மையில் மிக வினோதமாக உள்ளது. 


வினோதமான சாலை விபத்து வீடியோவை இங்கே காணலாம்: 



சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நடுவில் இருந்து வரும் இரு வாகனங்கள் வினோதமான முறையில் திரும்புவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த மர்மமான சம்பவத்தை பார்த்தால் நிச்சயம் உங்கள் மனமும் கலங்கிவிடும். 


ஒரு ஜீப்ரா கிராசிங்கின் அருகே இரண்டு வாகனங்கள் நிற்பதையும், மூன்றாவது வாகனம் பின்னால் வருவதையும் வீடியோவில் முதலில் காண்கிறோம். ஆனால் அந்த வாகனங்கள் ஜீப்ரா கிராசிங்கில் இருந்து நகரத் தொடங்கும் போது, ​​​​திடீரென ஒரு வாகனம் பின்னால் இருந்து காற்றில் எழுகிறது. அதன் அருகில் நின்றிருந்த வண்டியும் காற்றில் எழுகிறது. பக்கத்தில் ஒரு காருக்கும் இதே போன்ற நிலை ஏற்படுகின்றது. ஆனால், முதலில் இருந்த இரு வாகனங்களும் இடித்துக்கொண்டு விபத்து ஏற்படுகின்றது. இந்த வீடியோவைப் பார்த்தால், இது எப்படி நடந்தது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். 


மேலும் படிக்க | என்னடா வாய்ல..எதையோ வாந்தி எடுத்த மலைப்பாம்பு : வைரல் வீடியோ


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @AbsoluteCIown என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 2.3 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ 1 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


வெறும் 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பயனாளிகள் பல்வேறு ரியாக்ஷன்களை கொடுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சில பயனர்கள் இந்த வீடியோவை போலியான வீடியோ என கூறி வருகிறார்கள். சிலர் இந்த சம்பவத்தை ஏலியன்களின் வேலை என்றும் கூறுகிறார்கள். அதே நேரத்தில், சில பயனர்கள் இந்த மர்மமான சம்பவத்தை ஹாலிவுட் படமான எக்ஸ்-மென் உடன் ஒப்பிடுகிறார்கள். 


மேலும் படிக்க | பறவையை போல் அசால்டாக பறக்கும் பாம்பு…திகிலூட்டும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ