பாடாய் படுத்திய நபர்: பக்காவா பதிலடி கொடுத்த ஆடு, கொண்டாடும் நெட்டிசன்ஸ்

Animal Viral Video: பார்த்தவுடன் ஆத்திரம் வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2023, 12:30 PM IST
  • இந்த வைரலான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • முகமது காசிம் காத்ரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார்.
  • இந்த வீடியோவுக்கு 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.
பாடாய் படுத்திய நபர்: பக்காவா பதிலடி கொடுத்த ஆடு, கொண்டாடும் நெட்டிசன்ஸ் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்களை பார்த்தால் நமக்கு நம்மை அறியாமல் கோவம் வருகிறது. அப்பாவி விலங்குகளை மனிதர்கள் சீண்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்தால் நம்மால் நம் கோவத்தை அடக்கிக்கொள்ள முடிவதில்லை. 

சமீபத்தில் நம்மை ஆச்சரியப்படவைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளால் சிலருக்கு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். மறுபுறம், இந்த விலங்குகள் அமைதியாக இருந்தாலும், வேண்டுமென்றே இவற்றை தொந்தரவு செய்யும் மனிதர்களையும் நாம் காண்கிறோம். விலங்குகளும் எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ளும்? சில சமயம் காரணமில்லாமல் தங்களை தொந்தரவு செய்யும் மனிதர்களுக்கு விலங்குகள் சரியான பதிலடி கொடுப்பதையும் நாம் பார்த்துள்ளோம். 

சமீபத்தில், இதே போன்ற ஒரு  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு நபர் செய்யும் செயல்களை பார்த்து கோவம் கொள்ளும் பயனர்கள், இறுதியில் நடக்கும் விஷயத்தை பார்த்து நிம்மதி அடைகிறார்கள். 

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை தாக்கிய முதலையை துவம்சம் செய்த தாய் யானை, வைரல் வீடியோ

ஆட்டை தொந்தரவு செய்யும் மனிதன்

 இந்த வீடியோவில், வெள்ளை சட்டை மற்றும் லுங்கி அணிந்த ஒரு நபர் ஒரு ஆட்டை வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்வதை நாம் காண முடிகின்றது. ஆட்டின் கொம்பை பிடித்துக்கொண்டு அதற்கு வலியை ஏற்படுத்தும் அந்த நபர், கொம்பை பிடித்து அதன் மூலம் ஆட்டை விழவைக்கை முயற்சிக்கிறார். 

ஆட்டை பாடாய்படுத்திய அவர் சிறிது நேரம் கழித்து அதை விட்டுவிட்டு செல்கிறார். ஆனால் அதன் பிறகு ஆடு செய்யும் செயல்தான் மாஸான செயலாகும். ஆடு புது தெம்புடன் எழுவது போல இரண்டு கால்களில் எழுந்து நிற்கிறது. பின்னர் அந்த நபரின் பின்னால் போய் அவரை கீழே தள்ளிவிட்டு பழிவாங்குகிறது. 

ஆடு கொடுத்த பதிலடியை இந்த பதிவில் காணலாம்:

வீடியோ 2 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

இந்த வைரலான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முகமது காசிம் காத்ரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார். தற்போது, ​​இந்த செய்தியை எழுதும் வரை இந்த வீடியோவுக்கு 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கருத்துகளை அளித்து வருகிறார்கள். ஆடு அந்த நபரை பழிவாங்கியதை பார்க்க திருப்தியாக இருப்பதாக சிலர் கூறியுள்ளார்கள். கீழே விழுந்த நபரை பார்த்து சிரிப்பு வந்ததாகவும், ஆட்டை பாராட்டியும் பலர் கமெண்ட் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: பழம் கொடுத்த பெண்ணை பறக்க விட்ட காட்டு யானை - பதறவைக்கும் காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News