அம்மானா சும்மாவா? குட்டியை தாக்கிய முதலையை துவம்சம் செய்த தாய் யானை, வைரல் வீடியோ

Animal Fight Video: தன் குட்டியை காப்பாற்ற தாய் யானை காட்டும் துணிச்சலின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2023, 11:02 AM IST
  • தாயன்பு என்பது ஒரு அபூர்வமான உணர்வு.
  • அது மனிதர்களுக்கானது மட்டுமல்ல.
  • விலங்குகளிலும் தாயின் பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது.
அம்மானா சும்மாவா? குட்டியை தாக்கிய முதலையை துவம்சம் செய்த தாய் யானை, வைரல் வீடியோ title=

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

தாயன்பு என்பது ஒரு அபூர்வமான உணர்வு. அது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. விலங்குகளிலும் தாயின் பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது. விலங்குகளின் தாயன்பை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் கண்டுள்ளோம். தங்கள் குட்டிகளை காக்க விலங்குகள் போராடுவதை இவற்றின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. சேற்று நீர் நிறைந்த குட்டையில் யானைக் குட்டி ஒன்று குளத்தின் நீரில் விளையாடிக்கொண்டு குளிப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. ஓரத்தில் தாய் யானை நின்றுகொண்டு தன்மீது தண்ணீரைத் தெளித்துக்கொண்டிருப்பதையும் காண்கிறோம். திடீரென்று நீரில் எதையோ கவனித்த  தாய் யானை குளத்திற்குள் நுழைகிறது. ஒரு முதலை தன் குட்டியை நோக்கி வருவதை தாய் பார்த்து விடுகிறது. இதைக் கண்டு வெகுண்டு எழுந்த யானை முதலையை கடுமையாக தாக்குகிறது. யானையின் தாக்குதலை முதலையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தன் உயிரை காத்துக்கொள்ள அது அங்கிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. 

மேலும் படிக்க | ஸ்கூல் மாணவர்களின் லூட்டிய பாருங்க..இப்படியா செய்றது..வீடியோ வைரல்

இந்த வீடியோவை சுசாந்தா நந்தா @susantananda3 என்ற தமது ட்விட்டரில் கணக்கில் பகிர்ந்துள்ளார், “யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பதில் எந்த அளவிற்குச் செல்லும் என்பதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. வேறு வழி இல்லாமல் முதலை சரணடைய வேண்டியதாயிற்று” என்று அவர் எழுதியுள்ளார்.

தாய்  யானையின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ ஒரு தாயின் அன்பையும் தன் குழந்தை மீதான அக்கறையையும் காட்டும் வகையில் உள்ளது.

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். “மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்.” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். “தாயன்புக்கு ஈடு இணையே கிடையாது” என்று மற்றொரு பயனர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். “இந்த யானை ஒரு சூப்பர் அம்மா” என கமெண்ட்செய்துள்ளார். 

மேலும் படிக்க | பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ரியாகஷன் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News