White Lion Viral Video: சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பதுபோல்... காட்டுக்கு ராஜா யாருனு கேட்டா அன்றும் இன்றும் என்றும் எல்லாரும் சிங்கம் என்றுதான் சொல்வார்கள். அதற்கு காரணத்தை கேட்டால் யாருக்கும் நிச்சயம் உறுதியாகத் தெரியாது. காட்டில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிங்கத்தின் அந்த கம்பீரமும், தோரணையும் (?!) தான் எல்லோரையும் அந்த முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் ஆண் சிங்கம் சிங்கிளா, கெத்தா, அதன் பிடரியை சிலுப்பிவிட்டு வரும்போது, 'நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட' பிஜிஎம் நமது மனதில் நிச்சயம் தோன்றும். தொலைக்காட்சியிலோ, இப்போது மொபைல், லேப்டாப்பிலேயோ சிங்கம் கர்ஜிப்பதையும், காட்டில் நடந்து வருவதையும் பார்ப்பதற்கே மிரட்சி ஏற்படும். அப்படியிருக்கும் சிங்கம் பவ்வியமாக உட்கார்ந்திருந்தால் உங்களுக்கே பார்க்க பிடிக்காது. ஏனென்றால், ராஜாவை ராஜத்தோரணையில் மட்டும் பார்ப்பதற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா...


சிங்கத்துடன் சேட்டை...


ஆனால், இங்கு ஒரு பெண் ஒரு வெள்ளை சிங்கத்தை கொஞ்சிக்குழாவி, அதனிடம் சேட்டை செய்கிறார்... அந்த பெண் வெள்ளை சிங்கத்திடம் சேட்டை செய்யும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்டாவில் மட்டுமின்றி பிற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிகம் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் விலங்குகள் நல ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.