இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்...

சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2024, 07:43 PM IST
இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்... title=

வைரல் வீடியோ: சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். எந்த விலங்குக்கும் சிங்கத்தை எதிர் நிற்கும் தைரியம் இருக்காது. சிங்கம் காட்டின் ராஜா என்று அழைப்பக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். யானை சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்றாலும், பொதுவாக சிங்கம் என்றாலே அது வீரத்தையும், கம்பீரத்தையும் நம் முன்னால் கொண்டு வருகிறது. காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே  அடங்கிவிடுகின்றன.

சிங்கம் தொடர்பான வேட்டை வீடியோக்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் இது வேடிக்கையான வீடியோ.  ஆம்... சிங்கங்கள் ஜாலியாக படுத்துக் கொண்டு, சாலையில் வழிமறித்து படுத்துக் கொண்டிருக்கும் வீடியோ மைகவும் வைரலாகி வருகிறது. திறந்த வெளியில் சஃபாரி சென்று, காட்டு விலங்குகளை அருகில் காண அனைவரும் விரும்புவார்கள்.  சஃபாரியில் சுமார் நான்கு ஐந்து திறந்த ஜீப் வாகனத்தில் பலர் வன பகுதியின் அழகினை ரசித்துக் கொண்டு போய் கொண்டிருக்கும் போது, மூன்று சிங்கங்கள் நடுவில் படுத்துக் கொண்டு ட்ராஃபிக் ஜாமை ஏற்படுத்தியுள்ளது. சிங்கங்கள் நடு ரோட்டில் படுத்துக் கொண்டு இருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. 

முதலில் இரண்டு சிங்கங்கள் சாலையில் படுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வரிசையாக வாகனங்கள் நிற்பதையும் காணலாம். அதே சமயம், மற்றோரு சிங்கம் ஒன்று, வாகனத்தின் நடுவில் புகுந்து வந்து, இரண்டு சிங்கங்களுடன் சேர்ந்து படுத்துக் கொள்கிறது. இவை மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை போல தெரிகிறது. 

மேலும் படிக்க | சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ

வைரலாகும் சிங்கம் வீடியோ

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அந்த வகையில், வனப்பகுதியில் சஃபாரியின் போது நடந்த இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ ஏராளமானோர் கண்டு ரசிப்பதுடன், பல விதமான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News