Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


1947 இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, சோகம், காதல், பிரிவு மற்றும் ஒற்றுமை பற்றிய பல கதைகளை நாம் கேட்டுள்ளோம். தற்போதும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இது இரு சகோதரர்களின் இதயத்தை உலுக்கும் கதை. 


1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு கர்தார்பூரில் மீண்டும் இணைந்த சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது. செவ்வாய் கிழமையன்று இந்த இரு சகோதரர்களும் உணர்வுபூர்வமாக மீண்டும் இணையும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி காண்பவர்களின் கண்களை ஈரமாக்கியது. 


சகோதரர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், ஒருவரையொருவர் தழுவி, பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்தனர். பின்னர் மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர். இந்த சகோதரர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தருணத்தைக் காட்டிய வீடியோவைப் (Viral Video) பார்த்த பயனர்களின் கருத்துகள் சமூக ஊடகங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடின. 


ALSO READ | Spit game! மாவுல எச்சில் துப்புவியா? மாமியா வீட்ல களி தின்னு! 6 பேரை அள்ளிய போலீஸ்!


கண் கலங்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் வசிக்கும் சித்திக், இந்தியாவின் பஞ்சாபின் புல்லன்வால் பகுதியிலிருந்து கர்தார்பூர் காரிடார் வழியாக கர்தார்பூருக்கு வந்த மூத்த சகோதரர் ஹபீப்பை சந்தித்தார் என நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. கர்தார்பூர் காரிடார், பாகிஸ்தானில் குருத்வாரா தர்பார் சாஹிப்பை இந்திய எல்லையுடன் இணைக்கின்றது. 


பிரிவினையின் போது சித்திக் ஒரு குழந்தையாக இருந்தார். அவருடைய குடும்பம் பிளவுபட்டது. அவரது மூத்த சகோதரர் ஹபீப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வளர்ந்தார். தனது தம்பியை சந்தித்த ஹபீப், கர்தார்பூர் வழித்தடம்தான் தங்கள் சந்திப்புக்கு மிகவும் உதவியாக இருந்தது என கூறி அதை மிகவும் பாராட்டினார். 


தி நியூஸ் இன்டர்நேஷனல் படி, இரு சகோதரர்களும் இந்த காரிடரில் அடிக்கடி சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்த கர்தார்பூர் காரிடாரைத் திறந்ததற்காக இரு சகோதரர்களும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களை பாராட்டினர். 


இதேபோன்ற மற்றொரு நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான சர்தார் கோபால் சிங்கும்,  பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த 91 வயதான முகமது பஷீரும் கர்தார்பூரில் மீண்டும் இணைந்தனர். இவர்களும் 1947 இல் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | தனது அழகான மணமகளைப் பார்த்து 'out of control' ஆன மணமகன் செய்த காரியம்: வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR