வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


பல இளைஞர்கள் சாலைகளில் ஸ்டண்ட் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக எக்ஸ்பிரஸ்வே மற்றும் திறந்தவெளி சாலைகளில் இளைஞர்கள் பைக்குகளில் ஸ்டண்ட் செய்வது வழக்கம். இளைஞர்கள் தங்கள் பைக்குகளில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் பல வீடியோக்களை நாம் இணையத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் இப்போது காணப்போகும் வீடியொ சற்று வித்தியாசமானது. 


மேலும் படிக்க | கைக்கு எட்டும் இடத்தில் வந்த நிலா! வானில் நிகழ்ந்த அதிசயம்! 


இதில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை பற்றி குறிப்பிட வேண்டும். இங்கு, பைக்குகளில் இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் ஸ்டண்ட் செய்வதை அடிக்கடி காண முடிகின்றது. இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் பல்சர் பைக்கில் ஸ்டண்ட் செய்வதை காண முடிகின்றது. இந்த வீடியோ காசியாபாத்தின் வேவ் சிடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை இணையதளவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இப்போது இந்த ஸ்டண்ட்மேன் முதியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


வீடியோவைப் பார்த்தால், இந்த முதியவருக்கு சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மோகம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் தான் உயிரை பணயம் வைத்து பைக்கில் இப்படி ஸ்டண்ட் செய்துள்ளார். முதியவரிடம் இருக்கும் இந்த ஸ்டண்ட் மோகத்தை அகற்ற காசியாபாத் போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து சலான் அனுப்பியுள்ளனர். 


ஸ்டண்ட் செய்யும் இந்த முதியவர் 'பைக் பாபா' என்ற பெயரில் அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருப்பவர். இப்படி உயிரை பணயம் வைத்து ஸ்டண்டுகளை செய்ய வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய இந்த வயதில், இவர் தானே ஸ்டண்ட் செய்ய ஆரம்பித்தார். இதனால் மற்றவர்களுக்கும் கெட்ட உதாரணம் கிடைக்கும் என்பதனால், அவருக்கு பாடம் புகட்ட போலீசார் முடிவு செய்து, அவர் பெயரில் 26 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு ஆன்லைனில் அபராதம் அனுப்பியுள்ளனர். 


இந்த பைக் பாபாவின் வீடியோ ட்விட்டரில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. இவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல், பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்கிறார். இவரது சமநிலை சற்று குறைந்தாலும், அது அவரது உயிருக்கே ஆபத்தாகலாம். அவர் ஹெல்மெட் கூட அணியாமல், திறந்த வெளியில் இந்த ஸ்டண்ட்களை செய்கிறார்.


பைக்கில் மாஸ் காட்டும் முதியவரின் வீடியோவை இங்கே காணலாம்: