Lion Viral Video ஒட்டகச்சிவிங்கியுடன் மோதும் சிங்க ராஜா: சிங்கக்கூட்டத்தை உதைத்து துரத்தும் Giraffe

சிங்கக்கூட்டத்துடன் மோதும் ஒட்டகச்சிவிங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.  ஒட்டகச்சிவிங்கியின் வலுவான உதையை சிங்கமும் அதன் குட்டிகளும் ஒரு நாளும் மறக்க முடியாது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 28, 2022, 05:38 PM IST
  • சிங்கத்துக்கே சவால் விடும் ஒட்டகச்சிவிங்கி
  • காட்டுக்கு ராஜான்னா எனக்கு என்ன?
  • ஒட்டகச்சிவிங்கியின் உதையால் பறக்கும் சிங்கக்கூட்டம்
Lion Viral Video ஒட்டகச்சிவிங்கியுடன் மோதும் சிங்க ராஜா: சிங்கக்கூட்டத்தை உதைத்து துரத்தும் Giraffe  title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன.அவையே, ஆச்சரியப்பட வைக்கின்றன, அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் தைரியத்தையும் கொடுக்கின்றன. 

எதிராளி எவ்வளவு வலிமையாக இருந்தாலும், நமது பலத்தை மறந்துவிடக்கூடாது, முயற்சிகளை தொடர்ந்து, இறுதிவரை போராட வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கும் வீடியக்களும் இணையத்தில் உலா வருகின்றன.

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான சண்டை வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் படிக்க | இது எங்க ஏரியா உள்ள வராத: மிரட்டும் முதலையின் சாலை உலா

சிங்கக்கூட்டத்துடன் மோதும் ஒட்டகச்சிவிங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது 
ஒட்டகச்சிவிங்கியின் வலுவான உதையை சிங்கமும் அதன் குட்டிகளும் ஒரு நாளும் மறக்க முடியாது என்று தோன்றும் அளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் உதை வேகமாய் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் விலங்குகளின் சண்டை வீடியோவில், சிங்கம் தனது குட்டிகளுடன் ஒட்டகச்சிவிங்கியை எப்படித் தாக்க முயல்கிறது என்பதைக் காணலாம்.

ஆனால் ஒட்டகச்சிவிங்கியின் தைரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால், சிங்கத்துக்கே அது வியப்பாக இருந்திருக்கும்.

மேலும் படிக்க | சாக்லேட்டிலிருந்து உருவாகும் பாம்பு: சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ 

காட்டுக்கே ராஜான்னாலும் எங்கிட்ட வச்சுக்காத என்று சொல்லும் அளவுக்கு சிங்கக்கூட்டத்துக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறது ஒட்டகச்சிவிங்கி. கலக்கலான உதை வீடியோ இன்ஸ்டாகிராமில் வைல்ட்லைஃப் ஸ்டோரிஸ் என்ற கணக்கில் பதிவேற்ற்ப்பட்டு பலரால் பகிரப்பட்டுள்ளது.

விலங்குகளில் ராஜா என்று அறியப்படும் சிங்கத்திடம் சிக்கினால் பிற விலங்குகள் சின்னாபின்னமாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிங்கத்தைக் கண்டால் ஓடாமல், நின்று சவால் விடும் தைரியம் உயரமான ஒட்டச்சிவிங்கிக்கு இருக்கிறது என்பதை சொல்லும் வீடியோ இது.

ஒட்டச்சிவிங்கியின் உயரத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல், அதனுடன் ஒப்பிடும்போது குள்ளமாக இருக்கும் சிங்கம், சீறி பாய்ந்து தாக்கினாலும் தனது வலிமையான கால்களை பயன்படுத்தி ஒட்டச்சிவிங்கி உதைக்கிறது.

மேலும் படிக்க | சிக்கிய பாம்பை காப்பாற்றிய பொதுமக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ 

சிங்கமும் அதன் குட்டிகளும் ஒட்டகச்சிவிங்கியை எப்படி வேட்டையாட முயல்கின்றன என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதேபோல, சீ போங்கடா சின்னப் பசங்களா என்ற ரேஞ்சில் பதற்றமே இல்லாமல் ஒட்டகச்சிவிங்கி சமயம் கிடைக்கும் போதெல்லாம் உதைக்கிறது.

ஒட்டகச்சிவிங்கி மீது சிங்கம் தாக்குதல் நடத்துகிறது
வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒட்டகச்சிவிங்கி காட்டில் எப்படி ஒய்யாரமாக நிற்கிறது என்பதை பார்க்கலாம். ஆனால் சிங்கமும் அதன் குட்டிகளும் சுற்றி வளைக்கின்றன. 

முதலில் சிங்கத்தின் குட்டிகள் ஒட்டகச்சிவிங்கியின் காலைப் பிடித்து தாக்க முயல்வதால், ஒட்டகச்சிவிங்கி பலமாக உதைக்கிறது. உதை வாங்கிய குட்டி சிங்கங்கள் தூரப் போய் விழுகின்றன.

இதென்ன வம்பா போச்சே என்று சீறும் சிங்கம் தானே வேட்டையாடும் பொறுப்பை ஏற்று தாக்குகிறது. ஆனால் ஒட்டகச்சிவிங்கி தன்னை ஆதிக்கம் செலுத்த யாரையும் அனுமதிக்கமால், எனது உயரமே எனக்கு தகுதி, எனது காலே எனக்கு பலம் என்று சூப்பர் உதைகளை கொடுக்கிறது.

மேலும் படிக்க | பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை

வலுவான உதைகள்
வீடியோவின் முடிவில், ஒட்டகச்சிவிங்கி அனைத்து சிங்கங்களையும் வலுவாக உதைப்பதைப் பார்க்கலாம். இறுதியில், அனைத்து சிங்கங்களையும் துரத்துவதில் வெற்றி பெறுகிறது ஒட்டகச்சிவிங்கி.

25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஒட்டகச்சிவிங்கியின் துணிச்சலைக் கண்டு கமெண்ட் பாக்ஸில் நெட்டிசன்களும் ரியாக்ஷன்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பளார் என அறைந்த மணமகன், திருப்பிக்கொடுத்த மணமகள்: ஷாக் கொடுக்கும் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News