பல மில்லியன் மக்கள் வாழும் இந்த உலகை அனைவரின் கைகளில் இருக்கும் சிறிய கைப்பேசி இணைத்து விட்டது. இந்த கைப்பேசி மூலம் நாம் பல நேரங்கிளல் பல வகையான விஷயங்களை தெரிந்து கொள்கிறோம். சமயங்களில், இந்த கைப்பேசிகளும் அதில் உள்ள சமூக வலைதளங்களும் பலருக்கு உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது. அப்படி, அனைவரையும் இணைக்கும் அந்த சமூக வலைதளங்களில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலும், பலரையும் நெகிழ வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வைரலாவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையான காதல் பெரும்பாலும் கிடைப்பதற்கு அரிதானதாக கருதப்படுகிறது, அப்படி ஒருவருக்கு அரிதான காதல் கிடைக்கிறது என்றால் அதை அவர்கள் எப்போதும் கைகளில் வைத்து போற்ற வேண்டும். அப்படி, கிடைத்தற்கரிய அரிதான காதலைத்தான் ஒரு வீடியோவில் வயதான தம்பதியினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | ரயிலில் தூங்க தூளி கட்டி பல்பு வாங்கிய தில்லாலங்கடி: வீடியோ வைரல்


பாட்டிக்கு தலை சீவி விடும் தாத்தா..


விவரம் தெரியாத வயதில், நமது தலையை தாய்தான் சீவி விடுவார். இந்த செயல், அப்பழுக்கற்ற அன்பின் அடையாளமாக பார்க்கப்படுவதுண்டு. அப்படி, ஒரு வயதான முதியவர், தனது மனைவிக்கு திண்ணை மீது ஏறி அமர்ந்து கொண்டு தலை சீவி விடும் வீடியோ நெட்டிசன்களை கண் கலங்க வைத்துள்ளது. 



அந்த வீடியோவில், மூதாட்டியின் தலையை சீவி விடும் முதியவர் சீப்பை வைத்து சரியாக வகுடு எடுத்து தனது மனைவிக்கு சிகை அலங்காரம் செய்கிறார். அந்த பாட்டியோ, வெட்கப்பட்டு கொண்டே தலையை காண்பிக்கிறார். சில விநாடிகள் மட்டுமே தொடரும் இந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸை பெற்றுள்ளது. பல லட்சம் வியூஸ்களையும், இந்த வீடியோ கடந்துள்ளது.


கண் கலங்கிய நெட்டிசன்கள்..


அனைத்துமே தற்போது டிஜிட்டல் மயமாக மாறி விட்டதால், பலருக்கு பழைய காலத்தில் வந்த காதல்களை போல இப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. இந்த ஆற்றாமையை பலர் எப்பாேதாவது இது போன்ற வீடியோக்களை பார்க்கும் போது அதன் கமெண்ட் செக்ஷனில் கொட்டி வருகின்றனர். அந்த வகையில், ஒரு சில நெட்டிசன்கள் “இது அல்லவோ உண்மையான காதல்..” என தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர், “இன்றைய இளைஞர்கள் இந்த தாத்தாவை போல காதலிக்க மறந்து விடுகின்றனர்” என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் இந்த வீடியோ தன்னை அழ வைத்ததாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் ரீ-ஷேர் செய்துள்ளனர். 


மேலும் படிக்க | காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ