வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் நம்மை மறந்து பார்க்கும், நம்மை மறந்து சிரிக்கும், வியக்கும் பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் நடன வீடியோக்களுக்கென தனி இடம் உண்டும். சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை அசத்தலாக நடனமாடும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். இப்படிப்பட்ட வீடியோக்கள் முதல் பார்வையிலேயே அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களின் முகத்தில் சிரிப்பையும் வரவழைக்கிறது. நடன வீடியோக்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் சில வீடியோக்கள், நடன அசைவுகளுக்காக மட்டுமல்லாமல், ஆடுபவரின் அசாத்திய ஆளுமை, எதை பற்றியும் கவலைப்படாத தைரியம் ஆகியவற்றுக்காகவும் பிரபலமாகின்றன. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. 


வைரலாகி வரும் வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் நடனமாடுவதை காண முடிகின்றது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் வயதான பிறகும், பாட்டி தனது வயதை பற்றி கவலைப்படாமல், வயது வெறும் எண்தான் என்பதுபோல பக்காவாக நடனமாடுகிறார். இதைப் பார்த்த பயனர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. எந்த வயதில் பலரால் சரியாக நடக்க கூட முடிவதில்லையோ, அந்த வயதில், ஒரு மூதாட்டி தன் இடுப்பை வளைத்து நடனமாடுவதைப் பார்த்த பயனர்கள் இதை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். 


பாட்டி ஆடிய மாஸான நடனம், பார்த்து வியந்த பயனர்கள்


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல தளங்களில் வெளியாகி வருகிறது.  வீடியோவில் காணப்படும் வயதான பாட்டி 'மோனிகா ஓ மை டார்லிங்' பாடலுக்கு பல வித நடன அசைவுகளுடன் மாஸாக நடனமாடுகிறார். பயனர்கள் இந்த வீடியோவை அதிகம் விரும்புவதற்கு இதுவே காரணம். இதுமட்டுமின்றி அவருடன் இருக்கும் அனைவரும் அவரை கை தட்டி, சேர்ந்து ஆடி உற்சாகப் படுத்துகிறார்கள். இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது. இள வயதினரே சோர்ந்து மூலையில் அமர்ந்திருக்கும் பல நிகழ்வுகளை நாம் காணும் இந்த காலத்தில் வயதானவர்கள் இப்படி உற்சாகத்தோடு நடந்துகொள்வது, நடனம் ஆடி தங்களை மகிழ்வித்துக்கொண்டு, பிறரையும் மகிழ்விப்பது நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே உள்ளது.


மேலும் படிக்க | அய்யய்யோ பயமா இருக்கே.. நபரை பதம் பார்க்கும் நாகப்பாம்பு: வீடியோ வைரல்


பாட்டியின் பக்காவான நடனத்தை இங்கே காணலாம்:



வீடியோ பயனர்களின் இதயங்களை வென்றது


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் viralbhayani என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர், ‘அட பாட்டி.. வேற லெவல்’ என தலைப்பில் எழுதியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி எழுதும் நேரம் வரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை 9 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பார்த்துள்ளனர். இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


ஒரு பயனர், ‘வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், ‘பாட்டி தனது நடனத்தால் அனைவரையும் மிஞ்சி விட்டார்’ என கமெண்ட் செய்துள்ளார். ‘இந்த பாட்டியிடன் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: கிச்சு கிச்சு மூட்டியதால் குலுங்கி சிரிக்கும் பாம்பு: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ