முக்கோண வடிவில் சைக்கிள்.. எப்படி சுத்தும்? வியக்க வைக்கும் வைரல் வீடியோ
Bicycle: சமீபத்தில் இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது, அதில் முக்கோண சக்கரத்தில் மிதிவண்டியில் பயணிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது பயங்கரமாக வைரலானது.
சைக்கிள் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. இந்த சைக்கிள்களில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். அதேபோல் சைக்கிளின் சக்கரங்கள் வட்ட வடிவத்தில் தான் இருக்கும், சொல்லப்போனால் சைக்கிள் மட்டுமல்ல பொதுவாக வாகனங்கள் என்றாலே அதன் சக்கரங்கள் வட்ட வடிவத்தில் தான் இருக்கும், இதுவரை அந்த வடிவத்தில் இருந்து தான் நாம் பார்த்திருக்கிறோம். சக்கரம் வட்டவடிவமாக இருந்தால் தான் அதனால் ஒழுங்காக சுழல முடியும், வட்ட வடிவம் தான் சக்கரத்தால் சரியாக இயங்க முடியும். மனித இனம் கண்டுபிடித்த சிறப்பான கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த வட்ட வடிவ சக்கரம். அந்த வகையில் வாகனங்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வந்தாலும் இதுவரை நாம் வட்ட வடிவ சக்கரத்தை மட்டும் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்போது ஒரு பொறியாளர் சைக்கிளின் சக்கரத்தை வட்ட வடிவத்திற்கு பதிலாக முக்கோண வடிவத்தில் சக்கரத்தை வடிவமைத்து இருக்கிறார்.
உண்மையில் இந்த சைக்கிள் ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் அதில் அற்புதமான வேலை செய்யப்பட்டுள்ளது. பார்க்க மிகவும் அழகாக இருக்கும் இந்த சைக்கிள் கண்ணை கவரும் வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை இயக்க எவ்வித நடவடிக்கையும் நீங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக இது ஒரு சாதாரண சைக்கிள் போல் தான் இயங்குகிறது. சாதாரண சைக்கிள் போல் இதையும் காலால் மிதித்தும், கைப்பிடியை பிடித்தும் ஓட்ட வேண்டும்.
மேலும் படிக்க | ’தம்பி அது பொம்மை இல்ல... நாகப்பாம்பு’ பாம்புடன் விளையாடும் குழந்தை வீடியோ வைரல்..!
இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது. இயற்பியல் தத்துவத்தின்படி, முக்கோண வடிவ சக்கரம் கொண்ட வாகனம் இயங்குவது சாத்தியமில்லை என்றாலும், இதனை தற்போது சாத்தியம் என்று நிரூபித்துள்ளது இந்த ஆராய்ச்சி. வீடியோவில் இந்த சைக்கிளை ஒருவர் ஓட்டுவதை நாம் காணலாம். அதன் வீடியோ வைரலானதால், மலைகளிலும் இந்த சைக்கிள் ஓட்ட முடியுமா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொருவர் இது மிகவும் சாதாரண சைக்கிள் என்று தெரிவித்துள்ளார்.
முக்கோண வடிவ சைக்கிளின் வீடியோவை இங்கே காணுங்கள்:
இதய வீடியோவை Massimo என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போன்று சதுர வடிவ சைக்கிளின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த சைக்கிள் வீடியோவை செர்ஜி கோர்டியேவ் எனும் பொறியாளர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். , சக்கரத்தை வடிவமைத்தது மட்டுமல்லாது அதனை இயங்கவும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ