Bride At Marriage Viral Video : திருநங்கைகளோ, திருநம்பிகளோ, ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவர் மனதிலும் பயமும் குதூகலமும் கலந்த ஒரு சடங்குமுறையாக இருப்பது திருமணம் மட்டும்தான். அந்த திருமணம் என்பது மிகவும் நேர்த்தியான ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக இருக்கும். இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் திருமணத்தை சுற்றிய வியாபாரம் என்பது கொடி கட்டி பறந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அளவிற்கு திருமணத்திற்காக செய்யப்படும் செலவுகளும், முக்கியத்துவங்களும் ஒன்று. அன்றைய நாள் சரியாக அமையாவிட்டால், வாழ்நாள் முழுமையாக மறக்க முடியாத கெட்ட நாளாகவும், அன்றைய சிறப்பாக அமைந்துவிட்டால் வாழ்வின் சிறந்த நாளாகவும் உங்கள் திருமண நாள் மாறிவிடும். எனவேதான், அனைவரும் அதனை ஒரு கொண்டாட்டமாகவும், தீவிரம் மிகுந்த சடங்காகவும் பார்க்கிறார்கள். 


அத்தைகைய சிறப்பு வாய்ந்த நாளில், தனது துணியில் அழுக்குக்கூட ஏறிவிடக்கூடாது என அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்கும் வேளையில், இந்த திருமணத்தின் மணமகள் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் உயர்ந்த உள்ளத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ


திருமண நாளில் தனது தலைமுடியை வெட்டிய மணமகளின் வீடியோதான் தற்போது வைரலாகிறது. @theunfilteredcollective என்ற பயனர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில், தனது திருமண வரவேற்பின் போது மணமகள் நடந்து செல்வது தெரிகிறது. பின்னர், அவர் தனது தலைமுடியை வெட்டுவதாக திருமண விழாவின் போது அனைவர் முன்னிலையிலும் அறிவிக்கிறார். 



புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்ய விரும்புவதால், தனது தலைமுடியை வெட்ட விரும்புவதாக அந்த மணமகள் தெரிவித்தார். அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கண்ணீர் மல்க மணமகளின் அறிவிப்பால் நெகிழ்ந்தனர். திருமணத்திற்காக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய மணமகள், கடைசியில் அதனை கையில் ஏந்தியபடி, வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்.  


இந்த வீடியோ தற்போது, 1 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த வீடியோவின் கீழ் ஒரு பயனர்,"...எனது தாயார் புற்றுநோயால் தலைமுடியை இழப்பை பார்க்கும்போது, ஒரு பெண்ணுக்கு முடி உதிர்வு என்பது எவ்வளவு பெரிய பாதிப்பை அளிக்கும் என்பதை முதன்முதலாக தெரிந்துகொண்டேன். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ