வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு திருமணமான தம்பதிகளின் சில்மிஷ காதல் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதேபோல் திருமணத்தில் பலவித வினோதமான சடங்குகள் நடைபெறும். அந்த வகையில் இங்கும் அதுபோன்ற ஒரு சடங்கு நடந்துள்ளது. அந்த சடங்கு வீடியோ தற்போது இணயத்தை கலக்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணமக்களை முத்தமிடச் சொன்னது தப்பா போச்சு
இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது, இந்த மணமக்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது. கடைசியாக நடந்த சடங்கில் இப்போது மணமகனும், மணமகளும் நெருக்கமாக அமர்ந்துள்ளனர். , இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடுமாறு புரோகிதர் கூறுகிறார். இதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் இந்த வீடியோவின் முக்கிய ஹைலைட் ஆகும்.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


உண்மையில், இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடச் சொன்னவுடன், மணமகன் உடனடியாக வேகமாக மணமக்களை இழுத்து பிடித்து முத்தமிடத் தொடங்கினார். அங்கிருந்த உறவினர்கள் மணமகனின் இந்த செயலை பார்த்து தங்களின் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்கத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகள் வெகுநேரம் வரை முத்தமிட்டுக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் இந்த காட்சியை அங்கிருந்த சிலர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


மணமகன், மணமகளின் வெறித்தனமான முத்தமிடும் வீடியோ காட்சியை இங்கே காணலாம்: 


 



சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதன்படி இந்த வீடியோ official_viralclips என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதேபோல் இந்த வீடியோ மிகவும் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.