ஆசையாய் ஊட்டி விட்ட மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ
Funny Wedding Video: மணமேடையிலேயே இப்படியா செய்வார்கள் என அனைவரையும் எண்ண வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பல திருமணங்களில் நடக்கும் சுவாரசியமான, ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் காண்கிறோம். சில காணொளிகள் உண்மைச் சம்பவங்களுடன் தொடர்புடையவை, சில வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை. இந்த வீடியோக்களில் சில நேரம் மணமக்களுக்கு இடையில் இருக்கும் காதலையும் காண்கிறோம், சில சமயம் இவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையையும் பார்க்கிறோம். தற்போது இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டவுடன் மணமகன் வலுக்கட்டாயமாக மணமகளுக்கு இனிப்பு ஊட்ட முயல்வதைக் காண முடிகின்றது. ஆனால் அவரது செயலால் மணமகள் ஆத்திரமடைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது பெரிய சண்டையாக உருவெடுக்கிறது.
மணமகனுக்கும் மணமகனுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், முதலில் திருமண சடங்குகள் நடப்பதை காண முடிகின்றது. அப்போது மணமகன் கையில் இனிப்பை வைத்துக்கொண்டு அதை மணமகளுக்கு ஊட்ட முயற்சிக்கிறார். அவர் மணமகளை கட்டாயபப்டுத்தி இனிப்பை ஊட்டுவதையும் காண முடிகின்றது.
மேலும் படிக்க | அலுவலகத்தில் நுழைந்த 6 அடி நீள பாம்பு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்
மணப்பெண்ணுக்கு மணமகனின் இந்த செய்கை சிறிதும் பிடிக்கவில்லை. அவரது செய்கை பிடிக்காமல் மணமகள் அவரை அடித்து விடுகிறார். இதனால் கடும் கோவம் கொண்ட மாப்பிள்ளை பதிலுக்கு மணப்பெண்ணை பலமுறை அறைந்தார். சிறிது நேரத்தில் மணமேடையே சண்டைக்களமாக மறியது.
மணமேடையில் புதுமண ஜோடி போட்ட சண்டையை இங்கே காணலாம்:
பொதுவாக திருமணங்களில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் இருக்கும். ஒவ்வொரு சடங்கும் பிரமாண்டமான முறையில் செய்யப்படுகிறது. ஆனால் இந்த வீடியோவில் முற்றிலும் வித்தியாசமான ஒன்றைதான் காண முடிகின்றது. எனினும், ஒரு புதுமண ஜோடி இப்படி சண்டை போடுவார்களா என்ற சந்தேகமும் வருகிறது. வீடியோவைப் பார்க்கும் போது இது மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இந்த வீடியோ @gharkekalesh என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | விஷ பாம்பிடம் வசமாய் மாட்டிக்கொண்ட பூனை: அடுக்கு என்னாச்சி..வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ