அலுவலகத்தில் நுழைந்த 6 அடி நீள பாம்பு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 14, 2022, 03:27 PM IST
  • கோவை சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சாரைப்பாம்பு.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • பாம்பின் வைரல் வீடியோ.
அலுவலகத்தில் நுழைந்த 6 அடி நீள பாம்பு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்

தற்போது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ ஆலயம்  மற்றும் பள்ளிகளுக்கான சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகம் உள்ளது இந்த அலுவலகம் முன்பு பல்வேறு பூச்சடிகளும் மரங்களும்  காணப்படும், இந்த நிலையில் இன்று வழக்கம் போல பணியாளர்கள் அங்கு வேலை பார்த்து வந்தனர் அப்போது சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையினர் லாபமாக பிடித்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

வீடியோவை இங்கே காண்க:

இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News