இணையத்தில் பகிரப்படும் நாய் மற்றும் பூனைகளின் வீடியோக்கள் ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து வைரலாகி வருகிறது.  மற்ற விலங்குகள் செய்யும் குறும்புகளை காட்டிலும் நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டு வளர்ப்பு பிராணிகளும் செய்யும் செயல்கள் அனைத்தும் விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகின்றன.  அதுபோன்று பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது, அதில் பூனை நாய்க்கு மசாஜ் செய்து விடுகிறது.  பெரும்பாலும் நாயும் பூனையும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும் காட்சியையே அதிகம் கண்டுகளித்த நமக்கு இந்த வீடியோ கொஞ்சம் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் சேர்த்து தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


இந்த அற்புதமான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் தரையில் நாய் ஒன்று அமைதியாக படுத்து உறங்கிக்கொண்டு இருக்கின்றது, அந்த நாயின் மீது பூனைக்குட்டி ஏறி அமர்ந்துகொண்டு தனது இரு முன்னங்கைகளால் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்வது மெதுவாக அழுத்தி அழுத்தி மசாஜ் செய்துகொண்டு இருக்கின்றது.  நாயின் உடல் முழுவதும் பூனை தனது இரு கைகளை வைத்து மசாஜ் செய்துகொண்டே இருக்க, அந்த நாயின் பூனை மசாஜ் செய்யும் சுகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.


 



இந்த காட்சி பல இணையாவசிகளையும் கவர்ந்து இருக்கிறது, கடந்த ஆகஸ்ட்-27ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை இரண்டயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல சிறப்பான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ