உலகில் அவ்வப்போது நடக்கும் பல விசித்திரமான சம்பவங்கள், நம்மை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தும். சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பேசப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது  பரபரப்பாக பேசப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில், இப்படி ஒரு பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் சிக்கிய கண்ணாடி டம்ளரை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. 


 துனிசியாவைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் தனக்கு அந்தரங்க பகுதியில் லேசான வலி இருப்பதாகவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதாகவும் எப்போதும் கூறிவந்தார். அவளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருப்பதாக அவள் நினைத்தாள். 


அதனால் அவள் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றாள். ஆனால், பரிசோதனையில் இது பொதுவான தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவரது உடலில் 8 சென்டிமீட்டர் நீளமுள்ள சிறுநீர்ப்பை கல் இருந்ததை கண்டு மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும் படிக்க | முதலையின் செயலால் முடங்கிய சாலை! வைரலாகும் வீடியோ


அந்தரங்க பகுதியில் இருந்து சிறுநீர்ப்பைக்கு சென்ற கண்ணாடி 


ஆனால், அந்த கல்லை ஆழமாக ஆராய்ந்து, உடலில் இருந்து அகற்றியபோது, அது கல் அல்ல கண்ணாடித் துண்டு என்பது தெரிய வந்தது. துனிசியாவின் Habib Bourguiba பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இந்த கண்ணாடி துண்டு அகற்றப்பட்டது. 


அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதிக்குள் சென்ற கண்ணாடி துண்டு, கால போக்கில் சிறுநீர்ப்பையை அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையின் போது பெண்ணின் உடலில் இது செருகப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது, ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை, மேலும் அந்த பெண்ணும் இந்த கூற்றை உறுதிப்படுத்தவில்லை.


அறுவை சிகிச்சை மூலம் உடலில் இருந்து கண்ணாடி அகற்றப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த அறுவை சிகிச்சை 2021 ஆம் ஆண்டின் இறுதியில் செய்யப்பட்டது, இப்போது அவரது உடல்நிலை முற்றிலும் நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR