சரக்கடித்து சர்க்கஸ் காட்டிய பூனை, விடாமல் சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ
Funny Video: மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு, தள்ளாடி வெளியே வரும் மனிதர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், குடித்து விட்டு நிலை தடுமாறிய பூனையை பார்த்துண்டா?
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு, தள்ளாடி வெளியே வரும் மனிதர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், குடித்து விட்டு நிலை தடுமாறிய பூனையை பார்த்துண்டா? இந்த வீடியோவில் பார்க்கலாம்.
டாஸ்மாக் கடையிலிருந்து தள்ளாடி தள்ளாடி வெளியே வரும் ஒரு வெள்ளை பூனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. பின்னால் ஒரு டாஸ்மாக் கடை இருப்பது தெரிகிறது. பூனை கடைக்கு வெளியே உள்ள பாதையில் கட்டுப்பாடு இல்லாமல், இரு பக்கமும் சாய்ந்து தள்ளாடி நடந்து வருகிறது.
மேலும் படிக்க | 'அம்மாடி...இவ்வளவு பெருசா' எலியை பார்த்து மிரண்ட பூனை: வீடியோ வைரல்
போதை ஏறி தள்ளாடிய பூனையின் வீடியோ இதோ
பூனை-யின் இந்த போதை ஏறிய நடை பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. பூனை ஒரு பக்கம் நடக்க முயற்சிக்க, அதன் கால்கள் வேறு பக்கத்தில் செல்கின்றன.
இந்த வீடியோவை பார்த்த அனைவரும் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR