குழந்தையாய் மாறி ஊஞ்சல் விளையாடிய யானை! வைரல் வீடியோ!
அசாமின் கௌஹாதி பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவில் யானை ஒன்று குழந்தையை போல ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
பூங்காக்களில் குழந்தைகள் தான் விளையாடணுமா, ஏன் நாங்களாம் விளையாட மாட்டோமா என்பது போன்று யானை ஒன்று குழந்தையை போன்று பூங்காவில் குதூகலமாக விளையாடும் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. நாம் நேரில் காண இயலாத சில வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் பலரின் இதயங்களையும் கவர்ந்து வைரலாகி விடுகிறது, அந்த வகையில் யானையின் இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கண்ணால் நாம் காண முடியாத பல கண்கவர் காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி சிறந்த அனுபவத்தை தருவதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. யானை என்பது மட்டுமின்றி பெரும்பாலும் விலங்குகளின் குறும்புத்தனம் நிறைந்த வீடியோக்கள் பலருக்கும் சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராக இருந்து வருகிறது, இதனாலேயே பலரும் விலங்குகளின் வீடியோக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்த யானையின் க்யூட்டான வீடியோவை இப்போது நாமும் பார்த்து மகிழலாம். இந்த வீடியோவானது ANI-ன் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் அசாமின் கௌஹாதி பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவில் யானை ஒன்று நிற்பதை பார்க்க முடிகிறது. சிறுவர்கள் பூங்காவில் யானை என்ன செய்கிறது என்று பார்த்தால் அந்த பெரிய யானையும் பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்களை பார்த்ததும் அதுவும் சிறிய குழந்தையாக மாறி விளையாட தொடங்குகிறது. குழந்தைகள் எப்படி மகிழ்ச்சியாக விளையாடுவார்களோ அதேபோன்று அந்த பெரிய யானையும் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருக்கிறது.
பூங்காவில் யானை குழந்தை போல விளையாடும் காட்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ