வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பல திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வினோதமான, வேடிக்கையான, விசித்திரமான வீடியோக்களை நாம் காண்கிறோம். இவற்றில் சில நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும், சில வீடியோக்கள் இப்படி கூட நடக்குமா என நம்மை வியக்க வைக்கின்றன. தற்போதும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.


ஒரு திருமண மேடையில், கூலிங் கிளாஸ் அணிந்த மணமகள் நடனமாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அப்போது அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்படுகிறது. மேடையில் இருந்த பந்தலில் திடீரென தீப்பிடித்தது. இதனால் திருமண மண்டபத்தில் பதற்றம் ஏற்பட்டது. சில கணங்களுக்குப் பிறகு பிரேமில் காணப்படும் காட்சி வியக்க வைக்கிறது.


மேலும் படிக்க | முதலையை அட்டாக் செய்த சிறுத்தை - திடீரென வந்த காட்டெருமை கூட்டம்: அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?


மேடையில் தீப்பிடித்தது


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்தில் மணப்பெண் தனது திருமணத்தில் நடனமாட விருப்பத்துடன் இருப்பதை காண முடிகின்றது. அவர் கருப்பு கண்ணாடி அணிந்து கூலாக நடனமாடத் தொடங்கினார். ஆனால், சிறிது நேரம் கழித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மேடையில் அவருக்குப் பின்னால் நெருப்பு பிடித்தது. ஒருவர் ஓடி வந்து தீயை அணைக்க ஆரம்பித்தார். ஆனால் தீயை அணைக்க முயன்ற அவர் கீழே விழுகிறார். அதன் பிறகு இன்னும் சிலர் வந்து தீயையும் அணைத்து அந்த நபருக்கும் முதலுதவி செய்கிறார்கள். ஆனால், தீயை அணைக்க இவர்கள் செய்யும் செயல்கள் மிக வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ளன. தான் ஆடத் தொடங்கியவுடன் தீ பிடித்ததால் மணப்பெண்ணும் கடுப்பாகிறார். அவரது ரியாக்ஷனும் மிக வேடிக்கையாக உள்ளது.



திருமண வீடியோ வைரலானது


மணமகள் தொடர்பான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது veshu4600 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவியை ப்ரபோஸ் செய்ய மாணவன்..அப்புறம் என்னாச்சி..வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ