வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேடிக்கையான வீடியோக்கள் அதிகம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்  சமூக ஊடகங்கள் இவற்றை வெளியிடுவதற்கு ஒரு தளமாக உள்ளது. இவற்றில் கேளிக்கைக்கான வீடியோக்கள் மட்டுமல்லாமல் பாடம் புகட்டும் வீடியோக்களும் உள்ளன. அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கும். 


அழகிய பெண் ஒருவர் முகவரி கேட்பது போல் ஒரு நபரை அணுகுவதை வீடியோவில் காண முடிகின்றது. பின், அந்த நபர் அவருக்கு முகவரியை விளக்குவதற்குள் அந்த நபரின் பர்சை அந்த பெண் திருடி விடுகிறார். அசால்டாக பர்சை எடுத்துக்கொண்டு அந்த பெண் சென்று விடுகிறார். ஆனால், அந்த நபருக்கு எதுவும் தெரியவே இல்லை. 


மேலும் படிக்க | மழையில் மாஸ் நடனம் ஆடும் நாய்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சில நொடிகள் கோண்ட இந்த வீடியோவில் ஒரு நபர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அப்போது ஒரு பெண் அவர் அருகில் வந்து ஒரு முகவரியை அடைய அந்த நபரிடம் வழி கெட்கிறார். அந்த நபர் அப்பாவியாக பதில் சொல்ல அந்த தில்லாலங்கடி பெண் அவரது பர்சை அசால்டாக அடித்துச்செல்கிறார். 


இந்த திருட்டு அதிர வைக்கும்


வீடியோவில் காணப்படும் இந்த திருட்டு அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது. திருடர்கள் இப்படி கூட இருப்பார்களா என அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த நபர் முகவரியை காட்டுவதில் மும்முரமாக இருக்க, கில்லாடி பெண் பர்சை அடித்துச்செல்கிறார். அந்த நபருக்கு நடக்கும் எதுவும் தெரியவில்லை. இந்த வீடியோ நமக்கு முக்கியமான ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதையும் வெளியே செல்லும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 


அசால்டாய் பர்சை அடித்துச் செல்லும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 


 



இந்த வீடியோ சமூக வலைதளங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது இன்ஸ்டாகிராமிலும் funtaap என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் இதற்கு அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | காதல் செய்யும் பாம்புகள்; இப்படி ஒரு காட்சியா: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ