அய்யோ படுத்துறானே என்னய... பூனையை நாற்காலியாக மாற்றிய நாய்!

நாய் ஒன்று அமைதியாக படுத்துக்கொண்டிருக்கும் பூனையின் மீது ஏறி அமர்ந்துகொண்டு அதனை வம்பிழுக்கும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 11, 2022, 07:33 AM IST
  • பூனையை விடாமல் துரத்தும் நாய்.
  • பூனை படுத்ததும் அதன் மீது ஏறி உட்கார்கிறது.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
அய்யோ படுத்துறானே என்னய... பூனையை நாற்காலியாக மாற்றிய நாய்! title=

தினம்தோறும் மிகவும் வித்தியாசமான, வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, இணையவாசிகள் ஆர்வத்தை பெரிதும் ஈர்க்கின்றன.  என்னதான் இணையத்தினால் ஒருபுறம் தீமைகள் வந்து சேர்ந்தாலும் பெரும்பாலும் இணையத்தினால் நன்மைகள் தான் கிடைக்கிறது, அதிலும் விலங்குகளின் வேடிக்கையான வீடியோக்களை பார்க்கும்பொழுது நமது சோகங்கள் மறைந்து சந்தோஷம் நிரம்பி வழிகிறது.  அப்படிப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் தான் இப்போது வைரலாகி வருகிறது, நாய் பூனை இரண்டும் செய்யும் செயலை பார்க்கும்பொழுது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.  இப்போதெல்லாம் அதிகளவில் நாயும், பூனையும் தான் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கிறது என்றுகூட சொல்லலாம், ஏனெனில் இணையதளங்களை திறந்தாலே அதில் அதிகம் நிறைந்திருப்பது நாய் மற்றும் பூனையின் வேடிக்கை காட்சிகள் தான்.

மேலும் படிக்க | இணையத்தை பற்ற வைத்த கியூட் நடனம்: ‘வாவ்’ என பாராட்டும் நெட்டிசன்கள்

நாய்யும், பூனையும் தனித்தனியாக குறும்பு செய்தாலே நமக்கு அதை பார்க்கும்பொழுது அளவுக்கடந்த மகிழ்ச்சி கிடைக்கும், அதுவே நாயும் பூனையும் ஒன்றாக செய்யும் செயல்களை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அப்படி நாயும் பூனையும் இருக்கும் வீடியோ ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு பூனையும் நாயும் நின்றுகொண்டே இருக்கின்றது, அப்போது அந்த பூனை அசதியாக கீழே படுக்க முயற்சி செய்ய நாய் பின்னாடியே சுத்திகொண்டு இருக்கிறது.  அந்த பூனை படுத்ததும் நாய் உடனே நாற்காலியில் அமர்வது போன்று அந்த பூனையின் மீது ஏறி அமர்ந்து கொள்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இந்த காட்சி திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் விதமாகவும், சிரிப்பை வரவழைக்கும் விதமாகவும் அமைந்து இருக்கிறது.  இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்து வருகின்றனர், இந்த வீடியோக்கு பலரும் சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு, லைக் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘என் ஏரியா, உள்ள வராத’: கோபத்துடன் துரத்திய யானை, பீதியில் பயணிகள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News