நள்ளிரவில்.. நடுரோட்டில்.. இளம் ஜோடி செய்த வேலை: கேமராவில் கைதாகிய வீடியோ வைரல்

Viral Dance Video: ஒரு அசத்தலான நடன வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. ஒரு இளம் ஜோடி, தெருவிளக்கின் கீழ் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2022, 04:40 PM IST
  • சாலையில் நடனமாடிய இளம் ஜோடி.
  • இணையத்தை கவர்ந்த நடன அசைவுகள்.
  • வைரலான வீடியோ.
நள்ளிரவில்.. நடுரோட்டில்.. இளம் ஜோடி செய்த வேலை: கேமராவில் கைதாகிய வீடியோ வைரல் title=

சாலை ஓரத்தில் நடனமாடும் ஜோடியின் வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். ச

நடனம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான வழியாகும். நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஏதாவது ஒரு வடிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். சிலர் மேடையில் நடனமாடுவார்கள், சிலர் டிஜெ-வில் கலக்குவார்கள். ஆனால், நடுரோட்டில் தெருவிளக்குகளின் ஒளியில் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்திய ஒரு ஜோடியை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சமீபத்திய நாட்களில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சாலையில் நடனமாடுவதைக் காண முடிகின்றது. இவர்களின் நடன அசைவுகள் அனுபவமிக்க டான்சர்கள் போல மிக லாவகமாகவும் அழகாகவும் உள்ளது. 

ஆள் இல்லாத சாலையில் நடனமாடி கலக்கிய ஜோடி 

பிரேர்னா மகேஸ்வரி என்ற பயனர் இந்த வீடியோவை ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். இதில், சாலையில் உள்ள தெரு விளக்குகளுக்கு கீழே ஒரு ஆணும் பெண்ணும் நடனமாடுவதைக் காண முடிகின்றது. இருவரும் தங்கள் நடனத்தில் மூழ்கியே விட்டார்கள். வீடியோவை பார்த்தால், யாரோ தங்களை படம் பிடிப்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவாகிறது. இந்த வீடியோ அருகில் உள்ள ஏதோ ஒரு கட்டிடத்தின் மாடியிலிருந்து எடுக்கப்பட்டுருக்க வேண்டும். இதை யாராவது எடுத்தார்களா அல்லது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் சாலையில் ஆடிய நடனம் கைதானதா என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | ‘என் ஏரியா, உள்ள வராத’: கோபத்துடன் துரத்திய யானை, பீதியில் பயணிகள், வீடியோ வைரல்

அசால்டாக, அசத்தலாக நடனமாடும் இருவரும் யார் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இவர்களின் நடனத்தைப் பார்த்தாலே இவர்கள் பயிற்சி பெற்ற டான்சர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இருவரின் நடன அசைவுகளும் சரியான ஒத்திசைவில் உள்ளன. மேலும் பாடலின் இசைக்கு ஏற்றவாறு இவர்கள் நடனமாடுவதையும் காணலாம். சுமார் 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோவுக்கு 1500க்கும் மேற்பட்ட ரீட்வீட்களும், 2.5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. 

இணையவாசிகள் இந்த ஜோடியின் ரசிகர்களாக மாறினர்

வீடியோவைப் பற்றி கருத்து தெரிவித்த பெரும்பாலான பயனர்கள் இருவரும் ஏதோ ஒரு நடன நிகழ்வுக்காக பயிற்சி செய்வதாகவும், அதற்காக மிகவும் ஆர்வமாக நடனமாடுவதாகவும் கூறி வருகிறார்கள். சிலர் இவர்கள் ஒரு காதல் ஜோடியாக இருக்கலாம் என கூறுகிறார்கள், சிலரோ இவர்கள் சகோதர சகோதரியாக இருக்கலாம் என்கிறார்கள். எப்படி இருந்தாலும், இவர்களது அற்புதமான நடனத்தை அனைவரும் ரசிக்கிறார்கள். இணையவாசிகள் இவர்களது அழகான நடனத்துக்கு ரசிகர்களாகி விட்டார்கள். 

இந்த ஜோடியின் இந்த கிளாஸான நடனம் மிக அழகாக இருப்பதோடு, அதே அழகோடு இணையத்தையும் கவர்ந்துள்ளது. இந்த அழகான டான்ஸ் வீடியோ இணையவாசிகளின் மனதையும் நடனமாட வைத்துள்ளது. 

மேலும் படிக்க | இணையத்தை பற்ற வைத்த கியூட் நடனம்: ‘வாவ்’ என பாராட்டும் நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News