பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஒரு பாம்பைப் பார்த்தாலே பயத்தால் நடுங்கும் நிலையில், ஒருவரை 125 பாம்புகள் சூழ்ந்தால் என்னவாகும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் ஒருவரின் வீட்டிற்கும் எப்படி இத்தனை பாம்புகள் (Snakes in Home) ஒரே நேரத்தில் வந்து நுழைந்தன என்பதும், பாம்புக்கடியால் அந்த நபர் இறந்து கிடந்ததும் உலகையே உறையச் செய்த செய்தியாக இருக்கிறது.


இந்த அதிர்ச்சி தரும் மரணச் செய்தி அமெரிக்காவில் நடைபெற்றது. 125 பாம்புகளால் சூழப்பட்ட நிலையில் 49 வயதான நபர் வீட்டில் இறந்து கிடந்தார்.


அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டியில் வசித்த 49 வயது நபர், அதிக விஷமுள்ள நாகப்பாம்புகள் என 125 பாம்புகளுக்கு இடையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.



14 அடி பர்மிய மலைப்பாம்பு
இந்தத் தகவல் எப்படி வெளி உலகத்திற்கு தெரியவந்தது? இறந்து கிடந்த நபரின் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு நாள் முழுவதும் தனது பக்கத்து வீட்டுக்காரர் கதவை திறக்காததால், அவரைப் பார்ப்பதற்காக அண்டை வீட்டிற்குச் சென்றார். 


ALSO READ | Viral Video: தன்னைத் தானே கடித்துக் கொள்ளும் பாம்பு


அது பாம்பு வீடாக இருந்ததைப் பார்த்து, அலறியடித்துக் கொண்டு உடனடியாக போலீசுக்கு போன் செய்திருக்கிறார் பக்கத்து விட்டுக்காரர்.


சம்பவ இடத்தில் இருந்த பாம்புகள் அனைத்தையும் மீட்க சார்லஸ் கவுண்டி அனிமல் கண்ட்ரோல் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த வினோதமான சம்பவம் குறித்து அனிமல் கண்ட்ரோல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தகவல் அளித்தார்.


"அனைத்து பாம்புகளும் (Snakes News) முறையான அனுமதி பெற்ற அமைப்புகளுக்கு அனுப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.


விலங்குகளை பராமரிக்க அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாம்புகள் தனிப்பட்ட முறையில் தத்துக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


ALSO READ | இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த இந்த வார டாப் 5 வைரல் வீடியோக்கள்


இந்த மரணம் கொலையா அல்லது சதியா இல்லை விளையாட்டா என்று இதுவரை கண்டறியப்படவில்லை. 


பிரேத பரிசோதனையும் முடிவுகள் மூலமும் இந்த விசித்திரமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உதவலாம். இந்த மரணத்தின் பின்னுள்ள விசித்திரத்தை கண்டறிய போலீசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.


பாம்பு தொடர்பான வீடியோக்களும், செய்திகளுமே வைரலாகி வந்த நிலையில், தற்போது 125  பாம்புகள் வீட்டிற்குள் எப்படி வந்தது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


ALSO READ | பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றிய விபரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR