வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சமூக ஊடக உலகமும் மிகவும் விசித்திரமானது. நாம் யோசித்துக்கூட பார்க்காத பல காட்சிகளை இங்கே நாம் காண்கிறோம். இந்த வைரல் வீடியோக்களின் மூலம் பலர் ஒரே இரவில் பிரபலமாகிறார்கள். சிலர் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள். 


மேலும் படிக்க | ‘வேண்டாம்...விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சி தப்பித்த முதலை, கில்லாடி முதியவர் 


அப்படிப்பட்ட ஒரு வீடியோ இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் விழிக்கிறார்கள். இதைப் பார்த்து சிரிப்பதா, வியப்பதா, அச்சப்படுவதா, கோவப்படுவதா, ஆச்சரியப்படுவதா என ஒன்றும் புரியவில்லை. 


இந்த வீடியோ ஒரு இளைஞனுடன் தொடர்புடையது. இவர் தனது ஸ்கூட்டியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் அழகை காண கண் கோடி வேண்டும். பொதுவாக நாம் அனைவரும் ஸ்கூட்டியில் பொருட்களை ஏற்றிச்செல்வது வழக்கம், ஆனால், இவர் ஏற்றிச்செல்லும் பொருட்களின் காரணமாக இவருக்கே ஸ்கூட்டியில் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆம், அவ்வளவு பொருட்களை ஏற்றிச்செல்கிறார்!!


பொருட்கள் அனைத்தையும் ஸ்கூட்டியில் ஏற்றிவிட்டு, அதில் இவர் ஒட்டிக்கொண்டு ஸ்கூட்டியை ஓட்டிச்செல்லும் காட்சி வைரலாக பரவி வருகிறது. 


ஸ்கூட்டியில் ஏற்றப்பட்ட ஏகப்பட்ட சாமான்கள் 


வைரலான இந்த வீடியோவில், ஒரு இளைஞன், சந்தையிலிருந்து பொருட்களை ஸ்கூட்டியில் வாங்கிச்செல்வதை காண முடிகின்றது. ஆவால், அவர் வாங்கிய பொருட்களின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அவராலேயே ஸ்கூட்டியில் அமர முடியாமல் ஒட்டிக்கொண்டு போகும் நிலை ஏற்படுகிறது. 


இந்த இளைஞனின் செயலை பார்த்து சாலையில் போகும் நபர்கள் குழம்பிப்போகிறார்கள். சிலருக்கோ என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வீடியோ காணும் நமக்கும் அப்படித்தான் உள்ளது. 


கில்லாடி இளைஞனின் ஸ்கூட்டர் சவாரி வீடியோவை இங்கே பாருங்கள்: