‘வேண்டாம்...விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சி தப்பித்த முதலை, கில்லாடி முதியவர்

Crocodile Attack Viral Video: ஒரு முதியவர் பயங்கரமான முதலையை பார்த்து அச்சப்படாமல், மிக அசால்டாக அதை துரத்திய விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2022, 04:11 PM IST
  • தாக்க வந்த முதலை.
  • துரத்தி அடித்த முதியவர்.
  • தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய முதலை.
‘வேண்டாம்...விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சி தப்பித்த முதலை, கில்லாடி முதியவர் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பெறுகின்றன. குறிப்பாக முதலை மற்றும் சிங்கத்தின் வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன.  முதலைகள் தண்ணீரில் மட்டுமல்லாமல் நிலத்திலும் மிகவும் ஆபத்தான விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. 

தற்போது மீண்டும் முதலை ஒரு நபரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அந்த நபர் ஏற்கனவே முதலையின் தாக்குதலுக்கு தயாராக இருந்ததால், அவர் உடனடியாக முதலைக்கு பதிலடி கொடுத்தார். 

எனினும், பயங்கரமான முதலையை பார்த்து அச்சப்படாமல், மிக அசால்டாக அவர் முதலையை துரத்திய விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | Animal-Human Love Video: முதலையை அன்புடன் தடவிக் கொடுத்து கொஞ்சும் க்யூட் லவ் வீடியோ 

பார்த்த உடனேயே தாக்கிய முதலை 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவில் ஒரு முதியவர் வாக்கிங் செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது. அப்போது ஆபத்தான முதலை ஒன்று அங்கு வருகிறது. மிகவும் வேகமாக அங்கு வரும் அந்த முதலை, அவரை தாக்குகிறது. இருப்பினும், அந்த நபர் ஏற்கனவே இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்தார். 

முதலை அவரைத் தாக்க வந்தவுடன், அந்த நபர் அதை ஒரு வாணலியால் அடிக்கத் தொடங்குகிறார். திடீரென அந்த நபர் தன்னைத் தாக்குவதைப் பார்த்த முதலை வேறு வழையில்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடு விடுகிறது. இந்த வீடியோவுக்கு பலவிதமான ரியாக்ஷன்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

முதலையை முதியவர் வாய் பிளக்க வைத்த வீடியோவை இங்கே காணலாம்:

முதியவரின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டு 

பொதுவாக, ஆபத்தான விலங்கு ஒன்று நம்மை தாக்கினால், அவர் நிலைகுலைந்து விடுவது வழக்கம். அவரால் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீள முடிவதில்லை. 

ஆனால் இந்த வீடியோவில் நாம் காணும் நபர், மிக அசால்டாக, கொசுவை அடிப்பது போல, முதலையை எதிர்கொண்டு விரட்டிய விதம் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ @Notdojaaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவுக்கு இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களும் அதிக அளவிலான லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் அந்த நபரின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | உன்னால நா கெட்டேன்! என்னால நீ கெட்ட! கரடியின் சேட்டை வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News