வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையம் என்பது அற்புதமான, கவர்ச்சிகரமான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களின் களஞ்சியமாகும். கடந்த சில மாதங்களாக பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. பாம்புகளை கண்டால் அனைவரும் பயந்தாலும், இவற்றின் வீடியோக்கள் அனைவரையும் வசீகரிக்கின்றன. 


உலகின் மிகக் கொடூரமான நச்சு பாம்பான கிங் கோப்ராவுக்கு ஒருவர் அதன் தலையில் முத்தமிடுவது போன்ற ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பை முத்தமிடும் முயற்சியில் அந்த நபர் பாம்புக்கு மிக நெருக்கமாக செல்வதை காண முடிகின்றது. சிறிது நேரத்திற்கு பிறகு, அவர் வெற்றிகரமாக பாம்பின் தலையில் முத்தமிட்டு விடுகிறார். 


மேலும் படிக்க | RRR 'நாட்டு கூத்து' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பானிய யூடியூபர்! 


பாம்பு நிபுணர் வாவா சுரேஷின் பெயரைக் குறிப்பிட்டு சவுரப் ஜாதவ் ஜாதவ் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சுரேஷ், கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிக்கும் நிபுணர் ஆவார். இவர்  38,000க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்தவர் மற்றும் 3,000 முறை பாம்புகள் இவரை கடித்துள்ளன. சிலரால் ‘கேரளாவின் பாம்பு மனிதர்’ என்றும் அழைக்கப்படும் இவர், 190க்கும் மேற்பட்ட ராஜ நாகப்பாம்புகளை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


ராஜா நாகப்பாம்பை தலையில் முத்தமிடும் மனிதன்: வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ-வை பார்த்த பலரால் இதை நம்ப முடியவில்லை. அந்த மனிதரின் தைரியம் பலரை வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 757 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. வாவா சுரேஷின் துணிச்சலான முயற்சியை பலர் பாராட்டினாலும், சிலர் இது மிகவும் ஆபத்தானது என்று கருதுகிறார்கள். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | முதலையுடன் மைண்ட்கேம் ஆடிய கோழி: பல்பு வாங்கிய முதலை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ