காய்கறி வகைகள், பழங்கள், தானியங்கள் போன்றவை உடலுக்கு எவ்வளவு தான் நன்மையளித்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் விரும்பி சாப்பிடுவது என்னவோ சாட் உணவுகளை தான்.  இந்த வகையான உணவுகளுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றே கூட சொல்லலாம், இத சுவை நமக்கு பிடித்துவிடுகிறது.  இந்த உணவுகளில் கிடைக்கும் சுவைகள் மற்ற இயற்கை வகை உணவுகளில் கிடைப்பதில்லை அதனாலேயே நாம் ஃபாஸ்ட் புட்களை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கிறோம்.  இந்த வகை உணவுகளில் பெரும்பாலானோருக்கு பிடித்தது பானி பூரி தான், அதிலும் குறிப்பாக பல பெண்களுக்கு பேவரைட் இந்த பானி பூரி தான்.  பானிபூரியை 'கோல்கப்பா' என்றும் வடமாநிலத்தினர் அழைக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்


பொதுவாக மக்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருளில் வித்தியாசங்களை கொண்டு வருவது தான் வியாபாரிகளின் முக்கியமான வேலை மற்றும் வியாபார யுக்தி.  அந்த வகையில் பானி பூரியிலும் பல வியாபாரிகள் பல்வேறு வித்தியாசங்களை கொன்டு வருகின்றனர்.  உணவு பிரியர்களாக இருப்பவர்களும் சரி, சாதாரண நபர்களும் சரி வித்தியாசமான உணவு என்றால் அனைவருக்குள்ளும் ஒருவித ஈர்ப்பு இருக்கும்.  இப்போது பலருக்கும் பிடித்த பானி பூரியில் வியாபாரி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார், அதுதான் பானி பூரி ஷேக்.  மில்க் ஷேக், சாக்லேட் ஷேக், ஸ்ட்ராபெரி ஷேக் போன்ற பலவற்றை கேள்வி பட்டிருப்போம் அதென்ன பானி பூரி ஷேக் என்பதை இங்கு பார்ப்போம்.


 



வியாபாரி ஒருவர் பானி பூரி ஷேக் தயாரித்து நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார், இது இன்ஸ்டாகிராமில் பஞ்சாப் ப்ளேஸ்ட் என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அவர் ஒரு மிக்சி ஜாரில் கொஞ்சம் பூரிகள், மசாலா, புளித்தண்ணீர், ஸ்வீட் சட்னி, பானி தண்ணீர் போன்ற அனைத்தையும் ஊற்றி மிக்சியில் அரைத்து கூழாக்குகிறார்.  அது ஒரு ஆரஞ்சு நிற கலவையாக இருக்கிறது, அதனை ஒரு டம்பளரில் ஊற்றி அதன் மேல் டாப்பிங்ஸ்க்காக சிறிது பூரிகளை நொறுக்கி போடுகிறார், இதன் பினிஷிங் டச் பார்ப்பதற்கு நன்றாக தோன்றினாலும் இதன் சுவை பற்றி நினைக்க கொஞ்சம் பதட்டமாக தான் உள்ளது.


மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ