சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ

Lion Funny Video: ஆசையாய் சிங்கத்துடன் சிலர் செல்ஃபி எடுக்க சென்ற வேளையில், அது செய்த வேலை அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 04:29 PM IST
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
  • இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.
  • சிங்கத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சிங்கத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் அதன் செயல்களை பாத்தால், யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. மிருகக்காட்சிசாலையில் சிங்கத்தை பார்த்தவுடன் சிலர் செல்ஃபி எடுக்க ஓடி வருவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் சிங்கம் செய்த செயலால் அவர்களது உற்சாகம் அனைத்தும் வீணாகிப்போனது. 

மாஸ் காட்டிய சிங்கம் 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், உயிரியல் பூங்காவில் சிங்கத்தைப் பார்த்த உடனேயே சிலர் அதனுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் செல்வதை காண முடிகின்றது. ஆனால் இங்கே காட்டு ராஜாவோ வேறு எதையோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது. அந்த நபர்கள் சிங்கத்துடன் படம் எடுத்தவுடனேயே அது திரும்பி தனது வித்தியாசமான தோற்றத்தைக் காட்டுகிறது. சிங்கத்தின் இந்த செயலால் அனைவரது மூடும் கெட்டு விடுகிறது. 

மேலும் படிக்க | வகுப்பறையில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

நக்கல் பிடித்த சிங்கத்தின் வீடியோவை இங்கே காணலாம்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@memes.bks)

சிங்கத்தின் இந்த வீடியோ memes.bks என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. வழக்கம் போல் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் பலவித ரியாக்ஷன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘ப்ப்பாபா.. என்ன நக்கல்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News