பாம்புடன் கோவிலுக்கு வந்து மாஸ் காட்டிய குட்டிப்பெண்: வீடியோ வைரல்
Scary Snake Video: இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஒரு சிறிய பெண் பொம்மை போல பாம்பை தூக்கிக்கொண்டு உலா வரும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
உலகம் முழுவதும் காணப்படும் பெரும்பாலான பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றிலிருந்து விலகி இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். மனிதர்கள் மட்டுமல்லாமல், பிற விலங்குகளும் பாம்புகளை கண்டால் தூரமாக சென்றுவிடுகின்றன. சமீப காலமாக சமூக ஊடகங்களில் பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவை அனைத்தும் நாம் பார்த்து ஆச்சரியப்படும் விதத்திலேயே உள்ளன.
சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறு குழந்தை பாம்பை பொம்மை போல் இழுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது.
பொதுவாக குழந்தைகள் சிறு வயதிலேயே பொம்மைகளுடன் விளையாடுவது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் காணப்படும் குழந்தை ஒரு பெரிய ஆபத்தான பாம்புடன் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இதைப் பார்த்த இணையவாசிகளின் கண்கள் இமைக்காமல் அப்படியே உள்ளன. அந்த வீடியோவில், கையில் பாம்புடன் கோவிலுக்குள் நுழைந்த குழந்தை பீதியை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ஒரு புறம் அச்சம் பற்றிக்கொண்டாலும், மறுபுறம் சிரிப்பும் வருகிறது.
மேலும் படிக்க | அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் நடுரோட்டில் இப்படியா செய்றது..வீடியோ வைரல்
பாம்புடன் விளையாடும் குழந்தை
வைரலாகி வரும் இந்த வீடியோவில், டி-சர்ட் மற்றும் அரை பேன்ட் அணிந்த ஒரு சிறு குழந்தை தனது கையில் பாம்புடன் கோவிலுக்குள் நுழைகிறது. பாம்பை பற்றியிருக்கும் குழந்தையிடம் பயம் என்ற உணர்வையே காண முடியவில்லை. குழந்தை பாம்பை பிடித்துக்கொண்டு வருவதை பார்த்து அங்கிருந்தவர்கள் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள். அங்கிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்கத் தொடங்குகிறார்கள்.
அதிர வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:
கடவுளின் உருவம் என கொண்டாடும் பயனர்கள்
கோவிலில் உள்ள மக்கள் அச்சமடைந்ததைக் கண்டு, ஒரு நபர் அந்தக் குழந்தையை கோவிலை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறார். பின்னர் அந்த குழந்தை பாம்புடன் வெளியே வருகிறது. பாம்புடன் குழந்தை இவ்வாறு விளையாடுவதை கண்டு பயனாளர்கள் திகைத்து போயுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் aviral_shukla5566 என்ற கணக்கில் பகிரப்படுள்ளது. இதற்கு இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும், 15 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
‘இது தெய்வக்குழந்தை’ என பலர் கூறியுள்ளனர். ‘குழந்தையின் பாதுகாப்பை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது’ என மற்றொரு பயனர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ