ஐஸ்லாந்தில் எரியும் எரிமலைக்கு முன்னால் மக்கள் கைப்பந்து விளையாடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. எரிமலை சீறும்போது மக்கள் உல்லாசமாக வாலிபால் விளையாடுவது மிகவும் விநோதமாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னணியில் எரிமலை வெடித்து சீறி பாய்ந்து குழப்புகள் வருவதை வீடியோவில் அங்கு சில நண்பர்கள், பந்தை தூக்கி போட்டு விளையாடுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் எரிமலை சீறிச் சிதறுவதை அவர்கள் பார்க்கவில்லை.
ஐஸ்லாந்தில் வெடிக்கும் எரிமலைக்கு முன்னால் வாலிபால் விளையாட்டை விளையாடும் இந்த அற்புதமான வீடியோ வைரலாகியுள்ளது. 



ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் நகருக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபாக்ராடல்ஸ்ஃப்ஜால் எரிமலை (Fagradalsfjall volcano) மார்ச் 19 அன்று வெடித்தது, எரிமலைக்குழம்பு செக்க செவேல் என தெரிந்தது. 


ஐஸ்லாந்து வானிலை ஆய்வு அலுவலகம் (IMO) தெரிவித்த தகவல்களின்படி, மார்ச் 19 அன்று இரவு 8:45 மணிக்கு எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியது, சமீபத்திய வாரங்களில் ஆயிரக்கணக்கான சிறிய பூகம்பங்கள் இப்பகுதியில் தாக்கிய பின்னர். கிட்டத்தட்ட 800 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட முதல் எரிமலை வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  



இந்த தருணத்தை கொண்டாட, 6 வீரர்களைக் கொண்ட குழு அந்த இடத்தில் ஒன்று கூடி வாலிபால் விளையாட்டை விளையாடியது. ரூட் ஐனார்ஸ்டோட்டிர் நம்பமுடியாத காட்சியைக் கைப்பற்றி, "ஃபாக்ராடல்ஸ்ஃப்ஜாலில் எரிமலை (Fagradalsfjall volcano) வெடிக்கும்போது மக்கள் சாதாரணமாக கைப்பந்து விளையாடுகிறார்கள்" என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.


அதிர்ஷ்டவசமாக, இந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் மக்களுக்கோ அல்லது உள்கட்டமைப்புக்கோ (infrastructure) எந்தவித உடனடி ஆபத்தும் ஏற்படவில்லை.


ALSO READ: IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR