எதிர்பாராத ஒரு வளர்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., எதிர்வரும் ஞாயிறு அன்று அதாவது மார்ச் 8-ஆம் தேதி தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் அனைவரையும் இடையிட வைப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் பதிவிடுகையில்., "இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் எனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்துவருகிறேன். மற்றும் அனைவரையும் இடுகையிட வைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் அதிகம் பின்தொடர்பவர்களில் ஒருவராக உள்ளார். உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுடன் தொடர்பில் இருக்க அவர் பெரும்பாலும் சமூக ஊடகங்களையே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது சமூக ஊடக கணக்குகளை விட்டுக்கொடுப்பது குறித்து யோசிக்கையில் தலைப்பு செய்தியாய் இந்த தகவல் உருவெடுத்துள்ளது.


எனினும் பிரதமர் மோடியின் இந்த பதிவை பல்லாயிரம் மக்கள் விரும்பியுள்ளனர். இந்த பதிவை நாம் பதிவு செய்யும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவினை சுமார் 18K மக்கள் லைக் செய்துள்ளனர். மற்றும் 12K மக்கள் மருபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடிக்கு தற்போது ட்விட்டரில் 53.3 மில்லியன் பின்தொடர்பாளர்களும், பேஸ்புக்கில் 44,722,143 பின்தொடர்பாளர்களும் உள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரதமர் முறையே 35.2 மில்லியன் மற்றும் 4.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் பதிவு அவரது பின்தொடர்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.