இந்த நவீன யுகத்தில் வீட்டில் இருக்கும் நபர்களையே பலராலும் கவனிக்க முடியாத சூழல் உள்ளது, இந்நிலையில் தெருவில் ஆதரவற்று திரியும் தெரு நாய் ஒன்றுக்கு ஏழை மனிதன் ஒருவர் உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  பொதுவாக தெரு நாய்களை யாரும் கண்டு கொள்வதில்லை, அவை சாலையோரங்களில் கிடைக்கும் வீணான உணவு பண்டங்களை தின்றுவிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அப்படிப்பட்ட அந்த தெரு நாய்க்கு ஒருவர் உணவளிக்கும் காட்சியை இணையத்தில் கண்ட நெட்டிசன்கள் அவரின் செயலை ரசித்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


 



இந்த வீடியோவை IPS அதிகாரி திபன்சு கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவில், ஒரு முதியவர் பழைய மற்றும் கிழிந்த ஆடைகளை அணிந்துக்கொண்டு பழைய சைக்கிளில் முன்பக்கத்தில் பையை தொங்கவிட்டு வருவதைக் பார்க்க முடிகிறது.  அந்த சைக்கிளின் பின்புறத்தில், புதிதாக சமைத்த உணவுள்ள ஒரு பெரிய பாத்திரத்தை வைத்திருக்கிறார்.  அந்த மனிதன் ஒரு தெருநாய்க்கு அருகில் நின்று, ஒரு பெரிய கரண்டியை எடுத்துக்கொண்டு, சாலையின் ஓரத்தில் நாய்க்கு தான் கொண்டு வந்த உணவை பரிமாறுகிறார்.  இந்த காட்சி பார்ப்பவர்கள் பலரையும் உணர்ச்சிவசப்பட செய்து இருக்கிறது.  இந்த வீடியோ தான் பலரையும் மனமுருக செய்து இருக்கிறது என்றால், இந்த வீடியோவுடன்  IPS அதிகாரி திபன்சு கப்ரா பதிவிட்டுள்ள கேப்ஷனும் பலரையும் கவர்ந்து இருக்கிறது.


அப்படி என்ன கேப்ஷன் என்றால் “கடவுள் எல்லோரையும் ஒருவருக்கு அல்லது மற்றவருக்கு உதவும் வகையில் படைத்துள்ளார்.  அதனை நமக்கு நினைவுபடுத்தும் விதமாக இந்த முதியவரின் செயல் அமைந்திருக்கிறது” என்று ட்வீட்டில் பதிவிட்டு இருக்கிறார்.  இந்த வீடியோவிற்கு பின்னணி இசையாக அமீர் கான் படமான 'பிகே' படத்தின் 'பகவான் ஹை கஹா ரே து' அமைந்து இருக்கிறது.  இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோ 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 4.4 ஆயிரம் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.  இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு நேர்மறையான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


 



 



 



மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR